Sriperumbudur Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளில் 5வது தொகுதிதான் ஸ்ரீபெரும்புதூர். இந்த தொகுதியில் மொத்தம் 8 முறை திமுகவும், 3 முறை அதிமுகவும், 2 முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்திய தேர்தல்களை பார்த்தோமானால், 2009 தேர்தலில் திமுகவின் டி.ஆர். பாலு வெற்றி பெற்ற நிலையில், 2014 தேர்தலில் அதிமுவின் ராமசந்திரன் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2019இல் மீண்டும் திமுகவின் டி.ஆர். பாலு வெற்றி பெற்றார்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மக்களவை தொகுதியில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), பல்லாவரம் (செங்கல்பட்டு), தாம்பரம் (செங்கல்பட்டு), சென்னையின் மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர் ஆகியவை இந்த மக்களவை தொகுதியில் இடம்பெற்றுள்ளது. 


வாக்காளர்கள் எண்ணிக்கை


ஆண் வாக்காளர்கள்: 11 லட்சத்து 69 ஆயிரத்து 344 பேர் 


பெண் வாக்காளர்கள்: 11 லட்சத்து 88 ஆயிரத்து 754 பேர்


மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 428 பேர்


மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 23 லட்சத்து 58 ஆயிரத்து 526 பேர்


மேலும் படிக்க | உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?


கடந்த 2019 மக்களவை தேர்தல் - ஒரு பார்வை


கடந்த 2019இல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற டி.ஆர். பாலு 7 லட்சத்து 93 ஆயிரத்து 281 வாக்குகளை பெற்றார். அவரின் வாக்கு சதவீதம் 56.53% ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் அ.வைத்திலிங்கம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 326 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். மக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீதர் 1 லட்சத்து 35 ஆயிரத்து 525 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். 


2024 வேட்பாளர்கள் யார் யார்?


2024ஆம் ஆண்டு தேர்தலில் 14 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், 17 சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் திமுக சார்பில் டி.ஆர். பாலு, அதிக சார்பில் ஜி.பிரேம்குமார், பாஜக கூட்டணியில் இடம்பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வி.என். வேணுகோபால், நாம் தமிழர் கட்சி சார்பில் வி. ரவிசந்திரன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக பார்க்கப்படுகின்றனர்.


பதிவான வாக்குகள்


2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 60.25% வாக்குகள் பதிவாகின. அதாவது மொத்தம் 14 லட்சத்து 35 ஆயிரத்து 243 வாக்குகள் பதிவாகின.


வெற்றி வாய்ப்பு யாருக்கு?


திமுக வலுவான வேட்பாளராக டி.ஆர். பாலுவை நிறுத்தியிருக்கும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அவரை வீழ்த்தும் அளவிற்கு பலம் வாய்ந்ததாக காணப்படவில்லை. இதில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 5 தொகுதிகளை திமுகவும், 1 தொகுதியை காங்கிரஸ் கட்சியும் வைத்துள்ளது. இதன்மூலம், திமுகவின் வெற்றி ஏறத்தாழ உறுதி எனலாம். தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.   


மேலும் படிக்க | மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: ECI இணையதளத்தில் காண்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ