ஒவ்வொரு வருடம் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று பழமையை நினைவுகூரும் வகையில், ரயில்வே நிர்வாகம் சார்பில் பாரம்பரிய ரயில்கள் இயக்கப்படும். சென்னையில் வருடந்தோறும் இத்தகைய சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று தவிர்க்க முடியாத காரணங்களால் பாரம்பரிய ரயில் இயக்கப்படவில்லை. இதனால் இஐஆர்-21 ரயில் என்ஜினுடன் கூடிய ரயிலை செப்டம்பர் 10 இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. 


உலகிலேயே தற்போது இயங்கிக்கொண்டு இருக்கும் பழமையான ரயில் என்ஜின்களில் ஒன்று இதுவாகும்.


இந்த ரயில் என்ஜின் ஏற்கனவே 2013-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று சென்னை எழும்பூரில் இருந்து கிண்டி வரை இயக்கப்பட்டது. இந்த ரயில் என்ஜினின் வயது 158 ஆண்டுகள் ஆகும்.


எழும்பூர் ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் இருந்து நேற்று காலை நீராவி என்ஜினுடன் கூடிய இந்த ரயில் இயக்கப்பட்டது.


இந்த ரயில் கோடம்பாக்கம் வரை சென்றது. இந்த ரயிலை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.