தமிழக தொழிலாளர்களை பயன்படுத்தி தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஒளிரும் தமிழ்நாடு மாநாட்டில் முதல்வர் உரை... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 'ஒளிரும் தமிழ்நாடு' என்ற மாநாட்டை காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் நடைபெறும், 'ஒளிரும் தமிழ்நாடு' என்ற காணொலி மாநாட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து உரையாற்றினார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.


ஒளிரும் தமிழ்நாடு மாநாட்டில் முதல்வர் பேசியதாவது... கொரோனாவால் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது, இயல்பு நிலையை நோக்கி தமிழகம் முன்னேறுகிறது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தமிழகத்தில் சூழ்நிலையை பொறுத்து, கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும். தமிழக தொழிலாளர்களை பயன்படுத்தி தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 


READ | கொரோனா சிகிச்சை - தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம் வெளியீடு...


இது குறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே 17 நிறுவனங்களுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆலைகள் இயல்பு நிலைக்கு திரும்ப தொழிலதிபர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. இன்னும் தமிழகத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்படும்" என அவர் கூறினார்.  


இந்த மாநாட்டில், 500-க்கும் மேற்பட்ட முன்னணித் தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட முன்னணித் தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். சிஐஐ (CII) தலைவர் ஹரி தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் தினேஷ், சந்தானம், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி, சன்மார் குழுமத்தின் துணைத்தலைவர் விஜய் சங்கர், வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம், டைம்லர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சத்யகம் ஆர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.