கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள அச்செட்டிப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரேம்நாத். இவருக்கு வயது 58. இவருடைய மகன் ஜெய்தீப். இவரது வயது 24. இவர் திருமணமாகாதவர். மகன் ஜெய்தீப் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக 12 ம் தேதி தந்தை மத்திகிரி போலீசில் புகார் அளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.


உடற்கூறு ஆய்வில் போலீசாருக்கு சந்தேக, ஏற்பட்டது. இதை அடுத்து போலீசார் பிரேம்நாத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் இறந்த ஜெய்தீப் மதுவுக்கு அடிமையாகி தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறினார். மேலும் தனது மகன் அடிக்கடி பெங்களூர் சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


‘இதனால் சுமார் ஐந்து லட்சம் வரை நாங்கள் செலவு செய்துள்ளோம். அப்படி இருந்தும் தொடர்ந்து போதையில் எங்களை அடிக்கடி துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தான் எனது மகன். எங்களுக்கு என்ன செய்வது என தெரியாமல் கடைசியாக கொலை செய்துவிட்டோம்’ என தந்தை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 



மேலும் படிக்க | தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்...


உதவியாக கொலை செய்யப்பட்டவரின் 19 வயது தம்பி யஸ்வந்த் மற்றும் அவருடைய தாய் மாமன் கர்நாடக மாநிலம் ஜிகினி பகுதியைச் சேர்ந்தவ மஞ்சுநாத் ஆகியோர் கொலையில் தந்தைக்கு உதவியாக இருந்துள்ளனர். மூவரும் கொலை செய்ய திட்டம் தீட்டி கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீசார்தெரிவித்ததனர். இதன் அடிப்படையில் போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.



இறந்த நபரின் தந்தை அளித்த வாக்குமூலத்தை அடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு, போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையாகிய மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் ஒசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆண்டு வாரியாக தேர்ச்சி விகிதம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ