தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்...

Edappadi Palanisamy: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்குக் ஜூன் 27ஆம் தேதி மறுவிசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 14, 2024, 01:22 PM IST
  • தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு
  • ஜூன் 27ஆம் தேதி மறுவிசாரணை
  • நீதிமன்றத்தில் ஆஜரானார் இபிஎஸ்
தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்... title=

Defamation Case Against EPS: தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்... வழக்கு விசாரணை மீண்டும் ஜுன் 27-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு.

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவிகிதத்தை பயன்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டி பேசியிருந்தார்.

இதனையடுத்து தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவதூறு பரப்பியதாக எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கடந்த ஏப்ரல் 18 ம் தேதி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

மேலும் படிக்க | 10 ஆம் வகுப்பு மறுதேர்வு எப்போது? மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இந்த நிலையில், 13-வது நீதித்துறை நடுவர் சக்திவேல் முன்னிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி ஆஜரானார். எடப்பாடி பழனிச்சாமி வருவதை அறிந்த அதிமுக தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர். அவர்களை கட்டுபடுத்த போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வழக்கு விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் இன்பதுரை, "தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆஜரானார். இந்த வரும் ஜூன் 27ஆம் தேதி மறுவிசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒருவர் தன்னை தவறாக, அவதூறாக பேசிவிட்டார் என்பதற்காக தொடரப்பட்ட வழக்கு. அதற்காக நீதிமன்றத்தில் ஆஜராவது முறை தான். அந்த வகையில் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிட்ட ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கும் போது எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைப்போம்", என்றார்.

மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது - ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News