நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மேல்முறையீடு மனுவை விசாரிக்க SC ஒப்புதல்!
டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் மேல்முறையீடு நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது!!
டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் மேல்முறையீடு நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது!!
டெல்லி: தலைநகர் டெல்லியில் டிசம்பர் 16, 2012 அன்று மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உழுக்கியது. இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது. ஆனால், கடைசி நேரத்தில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசுன் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவிடாமல் தூக்கிலிட முடியாது என்று மத்திய அரசு மனுவில் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை இந்த உத்தரவை நிறைவேற்றிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட், நிர்பயா வழக்கு ஒரு கொடூரமான குற்றம் என்பதில் சந்தேகமில்லை, குற்றவாளிகள் கிடைக்கும் ஒவ்வொரு தீர்வையும் எடுப்பார்கள். மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் மேல்முறையீடு நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.