Supreme Court Condemns TN Governor RN Ravi: சமீபத்தில் சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டின் போது, முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதிருந்த தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து, அவர் எம்எல்ஏவாக நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் அமைச்சராக பொறுப்பேற்க ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைக்க முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து, தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதே தவிர அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கவில்லை என்றும் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும் எனவும் கூறி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு தெரிவித்தார். 


ஆளுநர் தடுக்கக் கூடாது


இதை தொடர்ந்து, பொன்முடி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய மறுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. பொன்முடி அமைச்சராவதை ஆளுநர் ஆர்.என். ரவி தடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | ஜனநாயக அறப்போர் நடத்த உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுக்கும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்!


மேலும், 'நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என எப்படி கூற முடியும்?. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்" என உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


நாளை வரை ஆளுநர் ரவிக்கு கெடு


அதுமட்டுமின்றி, பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக முடிவெடுக்க ஆளுநர் ஆர். என். ரவிக்கு நாளை (மார்ச் 22) வரை கெடு விதிக்கிறோம். நாளைக்குள் முடிவு எடுக்கவில்லை என்றால், நாங்கள் செய்ய இருப்பதை இப்போது சொல்லப் போவதில்லை." என தெரிவித்துள்ளனர். அதாவது, அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு மூடுவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அதன் உத்தரவில் தெரிவித்துள்ளது.


முன்னதாக, சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அந்த வகையில், தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றது. அந்த மனு மீதான விசாரணையில்தான் பொன்முடியின் தண்டனையை நிறுத்திவைத்து சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 


மேலும், அதில் பொன்முடி எம்எல்ஏவாக தொடரவும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதன்மூலம், அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த உத்தரவும் திரும்பப் பெற பெற்று அவர் தற்போது எம்எல்ஏவாக தொடர்கிறார். இதை தொடர்ந்து, அவர் மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 


இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க நேரம் ஒதுக்கக் கோரி கேட்கப்பட்டிருந்தது. அப்போது உடனே டெல்லி புறப்பட்ட ஆளுநர் ஆர்.என். ரவி, சில நாள்கள் கழித்தே முதலமைச்சருக்கு பதில் கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நெல்லையில் சிம்லா முத்துச்சோழன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ