முல்லைப் பெரியாறு அணை: கேரள அரசு கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழு தலைவரை மாற்றுவது தொடர்பான கேரள அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை: கேரள அரசு கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழு தலைவரை மாற்றுவது தொடர்பான கேரள அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
விசாரணையில், தேசிய அணை ஆணையம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்வரை முல்லைப் பெரியாறு அணைக்கான கண்காணிப்பு குழு கூடுதல் அதிகாரத்துடன் செயல்பட வேண்டும் என்று கேரள அரசு கூறியது.
இது மத்திய அரசின் யோசனை என்றும் அதை ஏற்பதாகவும் கேரள மாநில அரசு தெரிவித்திருந்தது. தேசிய அணை ஆணையத்தை நிர்மாணிக்க காலக்கெடுவை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கேரள அரசு முன்வைத்தது.
தேசிய அணை ஆணையத்தை உருவாக்க காலம் அதிகமாக எடுத்துக் கொள்வது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு அதிருப்தி தெரிவித்திருந்தது.
மேலும் படிக்க | அடுத்தடுத்து வரும் அணைப் பிரச்சினைகள்: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
தேசிய அணை ஆணையம் செயல்படும் வரை, கண்காணிப்பு குழு முழு அதிகாரத்துடன் செயல்படுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அணையை பலப்படுத்தும் பணிகள் இதுவரை நடைபெறாமல் இருப்பதற்கு கேரள அரசு முட்டுக்கட்டை விதிப்பதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது..
இரு தரப்பு விசாரணையையும் கேட்ட நீதிபதிகள் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்துக்கு முதலில் தீர்வு காணலாம் என்றும், புதிய அணை கோரிக்கை தொடர்பாக பின்னர் விசாரிக்கலாம் என்று தெரிவித்தனர்.
அதையடுத்து, தொடர்ந்து அணை பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினையை எழுப்பியப்பது. அதிலும் கண்காணிப்பு குழு தொடர்பான விமர்சனத்தை மனுதாரர்கள் முன்வைத்தனர்.
அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், எந்த வித அடிப்படை முகாந்திரமும் இன்றி உச்ச நிதிமன்றம் நியமித்துள்ள அணை கண்காணிப்பு குழு மீது குற்றச்சாட்டை முன்வைக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழு தொடர்பான கேரள நீதிமன்றாத்தின் கோரிக்கையை உச்ச நிதிமன்றம் நிராகரித்தது.
மேலும் படிக்க | முல்லைப் பெரியாறு அணை 4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது: துரைமுருகன்
முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளதும், மேகதாது அணையின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் முயற்சிகளும் தமிழகத்திற்கு தலைவலியாக இருக்கிறது.
தமிழக நதி நீர் நலன்களைக் காவு கொடுக்காமல் காப்பாற்ற வேண்டிய நிலையில் தமிழக அரசு இருப்பதால், இன்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு ஆறுதலாக இருக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR