முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது.கேரள மக்களின் பாதுகாப்பை தமிழ்நாடு உறுதி செய்யுமென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மேகதாது அணையின் குறுக்கே அணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்ட கர்நாடக அரசு தயாராக இருப்பதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழக நதி நீர் நலன்களைக் காவு கொடுக்காமல் காப்பாற்ற வேண்டிய நிலையில் தமிழக அரசு இருப்பதால், என்ன செய்யப் போகிறது என அனைத்துக் கட்சிகளும் உற்று கவனிக்கத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது சட்டப்பேரவை அவசரமாக கூட்டப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நான்கு முறை சட்டப்பேரவை கூட்டப்பட்டிருக்கிறது...
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை நிரப்ப முடியாது என கேரள அரசு தெரிவித்திருந்த நிலையில் நான்காவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது என துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.