பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சீசிங் ராஜா போலீஸாரால் தேடப்பட்டு வரும் நிலையில், செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக அவர் குறித்து தகவல் தெரிவிக்குமாறு மாவட்டம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற வழக்கில் சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது புகைப்படத்துடன் கூடிய பொது அறிவிப்பு சுவரொட்டி தாம்பரம் மாநகர காவல் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் கிழக்கு தாம்பரம் ராம கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜா என்கிற சீசிங் ராஜா (49), என்பவர் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு வழக்கின் குற்றவாளி ஆவார். அந்த வழக்கில் முறைப்படி அழைப்பாணை வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை பிறக்கப்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். நீதிமன்றத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற வழக்கில் 2024 ஆகஸ்ட் 20-ம் தேதி ராஜா என்கிற சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அவரை பற்றி தகவல் தெரிந்தால் சேலையூர் காவல் ஆய்வாளர் 98401 25656, காவல் ஆய்வாளர் அலுவலகம் 94981 00157 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சீசிங் ராஜாவின் புகைப்படத்துடன் கூடிய பொது அறிவிப்பு சுவரொட்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை! அதிர்ச்சி சம்பவம்!



ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் ரவுடி சீசிங் ராஜாவுக்கு தொடர்பு எப்படி? 


வடசென்னை ரவுடி ஆற்காடு சுரேஷுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.  கடந்த 2023ம் ஆண்டு பட்டினப்பாக்கத்தில் ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டதில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்புள்ளது என்று ஆற்காடு சுரேஷ் தர்ப்பு நம்பி வந்துள்ளது. அண்ணனை கொலை செய்ததோடு அல்லாமல், தன்னையும் கொலை செய்துவிடுவதாக ஆஸ்ம்ட்ராங் தரப்பு மிரட்டி வந்ததால், இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விதம் தென் மாவட்ட கூலிப்படையின் ஸ்டைல் போன்று உள்ளதாலும்,  தூத்துக்குடியை சேர்ந்தவருடன் நிலம் தொடர்பான பஞ்சாயத்தில் ஆம்ஸ்ட்ராங் ஈடுபட்டு வந்ததாலும் இந்த சந்தேகம் வலுத்துள்ளது. 



இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் சீசிங் ராஜா பெயர் அடிபட்டுள்ளது. ஆற்காடு சுரேஷுக்கு ஒரு பிரச்சனை என்றால் சீசிங் ராஜா பின்னால் நிற்பாராம். இருவரும் உயிருக்கு உயிரான நண்பர்களாம். அதனால் ஆற்காடு சுரேஷுன் கொலைக்கு பழிவாங்க  ஆம்ஸ்ட்ராங் கொலையில் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இருக்குமோ என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரபல ரவுடி பாம் சரவணன் அண்ணன் தென்னரசு கொலையில் முக்கிய குற்றவாளியாக சீசிங் ராஜா செயல்பட்டார். இவர் வெளியே தலைகாட்டாமல் கொலை, ஆள் கடத்தல், கொள்ளை போன்ற பல குற்ற சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுப்பதில் expert ஆம்.   


சமீபத்தில் சென்னை புறநகர் பகுதியை பரபரப்பாகிய திமுக ஒன்றிய செயலாளர் ஆறமுதன் கொலையும் ரவுடி சீசிங் ராஜாவின் கூட்டாளிகளால் செய்து முடிக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது மற்றும் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் தம்பி நெடுங்குன்றம் உதயாவின் கொலையிலும் சீசிங் ராஜாவின் பங்கு இருப்பதாகவும் இதனால் சீசிங் ராஜாவும் நெடுங்குன்றம் சூர்யாவும் பரம எதிரிகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது இதுபோன்று பெரிய பெரிய சம்பவங்களில் மூளையாக செயல்படும் சீசிங் ராஜாவின் பெயர் ஒருபோதும் வெளியில் கசிந்து விடாதவாறு பார்த்துக் கொள்வதில் சீசிங் ராஜா கெட்டிக்காரர் எனவும் கூறப்படுகிறது. 


செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் ராதாகிருஷ்ணாபுரம்  பகுதியை சேர்ந்தவர் ராஜா என்கிற சீசிங் ராஜா. வழிப்பறி குற்றவாளியாக சிறு குற்றங்களில் துவங்கிய ராஜா, படிப்படியாக வளர்ந்து  A+  குற்றவாளியாக உள்ளார். சென்னை புறநகர் பகுதிகளில் தொழிலதிபர்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார் சீசிங் ராஜா.  சீசிங் ராஜா மீது தாம்பரம், சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி, சேலையூர், செங்கல்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 5 கொலை வழக்குகளும், 5 கொலை முயற்சி வழக்குகளும், ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 33 வழக்குகள் உள்ளன. சீசிங் ராஜா  இதுவரை 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 


மேலும் படிக்க | எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு - முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ