தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்!
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இயக்குநர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சென்னை வடபழனியில் தொடங்கியது!!
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இயக்குநர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சென்னை வடபழனியில் தொடங்கியது!!
சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. ஆர்.கே.செல்வமணி, வித்யாசாகர் ஆகியோர் இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இயக்குநர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா விலகிய நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. இயக்குநர்கள் சங்கத் துணை தலைவர் பதவிக்கு கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா, வேல்முருகன் போட்டியிடுகின்றன.
இயக்குநர் சங்கத் தலைவராக சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தேர்தல்தேதி அறிவிக்கப்பட்ட சமயத்தில், அவர் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து இன்று தலைவர் பதவிக்கும் சேர்த்து இன்று இயக்குநர் சங்கத் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஸ்ரீவித்யா சங்கர் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் வேட்புமனு செய்யாத நிலையில் ஆர்.வி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இணைச் செயலர் பதவிக்கு லிங்குசாமி உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர். 12 செயற்குழு உறுப்பினர் பதவிக்காக இயக்குனர் மனோபாலா ரமேஷ்கண்ணா உள்ளிட்ட 30 பேரும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 2,045 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.