இன்றைய வானிலை முன்னறிவிப்பு: தொடர் 2 நாட்களுக்கு கனமழை....
தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 2 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.....
தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 2 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.....
வடகிழக்கு பருவ மழை மேலும் தீவிரம் அடைந்து, இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழையாக கொட்டும் என்றும், தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவில் வட கிழக்கு பருவ மழை நாளைக்குள் தீவிரம் அடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குனர் கூறுகையில்...!
வங்க கடலின் தென் மேற்கில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளைக்குள், வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடையும். சென்னையில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மாநிலம் முழுவதும், படிப்படியாக மழை அதிகரிக்கும். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையில், நாளை, ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், நாகை, திருவாரூர், அரியலுார், பெரம்பலுார் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில், 11 செ.மீ., வரை மழை பெய்யும் என மஞ்சள், 'அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வானிலை ஆய்வு கணிப்புகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.