தமிழகத்தில் கொரோனா பரவலை (Coronavirus) கட்டுபடுத்த தமிழக அரசு கடந்த இரு வாரமாக முழு ஊடரங்கை அமல்படுத்தப்பட்ட நிலையில் , தொற்று பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து நாளை முதல்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கொரோனா தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் எனப்படும் மது பானகடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில்,  தற்போதுள்ள தொற்று எண்ணிக்கையை விட குறைந்த அளவு தொற்று இருந்த கால கட்டத்தில், டாஸ்மாக் (TASMAC) கடைகளை திறக்க திமுக போரட்டம் நடத்திய நிலையில், தற்போது, ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன் என தொடர்ந்து பல தரப்பினர் மற்றும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


ALSO READ | TASMAC திறப்பு: இது தான் விடியலா.. வானதி சீனிவாசன் கேள்வி


இந்நிலையில், மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக MLA, எம்.ஆர்.காந்தி, குஷ்பு,  ஆகியோர் பதாகை ஏந்தி தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 


சென்னையில் உள்ள பாஜக (BJP) கட்சி அலுவலகமான கமலாலயத்தில், பாஜக தலைவர் எல்.முருகன் பதாகைகளை ஏந்தி, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினார்.



பாஜக நிர்வாகியான நடிகை குஷ்பு, சென்னையில் உள்ள தனது வீட்டின் முன்பு, தனது ஆதரவாளர்களுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டம் நடத்தினார்.



கன்னியாகுமரியில், பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி, டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது வீட்டு முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடத்தினார்.


ALSO READ: Tasmac: டாஸ்மாக் திறப்புக்கு எதிராக BJP ஜூன் 13 ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR