தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சில நாட்களாக குறைந்து வருவதால், ஊரடங்கு உத்தரவில் தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தளர்வுகளின் ஒரு பகுதியாக, தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து தொற்று குறைந்து வரும் எஞ்சிய 27 மாவட்டங்களில் டாஸ்மாக் ( TASMAC) கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.
கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி கனிமொழி, தற்போதைய திமுக அரசின் அறிவிப்பிற்கு ஏன் மவுனம் காக்கிறார் என்று தமிழக பாஜக (BJP) எம்எல்ஏ வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan) கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பதிவிட்ட ட்விட்டர் பதிவில், அண்ணனிடம் கேள்வி எழுப்புவீர்களா என பதிவிட்டுள்ளார்
இப்போது அண்ணனிடம் @CMOTamilnadu @mkstalin
என்ன , எப்படி கேட்பீர்கள்?? https://t.co/HvXuMTSzH7— Vanathi Srinivasan (@VanathiBJP) June 11, 2021
ALSO READ | தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்; யாருக்கு இ-பாஸ் அவசியம்.. விபரம் உள்ளே
தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும், அதிமுக உள்ளிட்ட எதிர் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்தாலும், தற்போது முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பத்தில் தமிழக அரசு ஏன் அவசரம் காட்டுகிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு என தெரிந்தும், கொரோனா பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு என தெரிந்தும், டாஸ்மாக் திறப்பது மனிதாபிமானமற்ற செயல் என தெரிந்தும், @mkstalin இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதித்திருப்பது யார் குடியை கெடுக்க? #குடிகெடுக்கும்_ஸ்டாலின் https://t.co/1pDPZf49e2
— AIADMK (@AIADMKOfficial) June 12, 2021
கடந்த அதிமுக ஆட்சியின் போது டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியதற்கு எதிராக குடியை கெடுக்கும் அதிமுக மற்றும் குடிகெடுக்கும் எடப்பாடி உள்ளிட்ட ஹேஷ்டேக்குள் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டன. தற்போது, அது போலவே குடிகெடுக்கும் ஸ்டாலின், குடியை கெடுக்கும் திமுக உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்பட்ட்டு வருகின்றன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR