Tasmac: டாஸ்மாக் திறப்புக்கு எதிராக BJP ஜூன் 13 ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்

பாஜகவினர் தங்களது வீடுகளிலே கருப்புக் கொடி ஏந்தி போராடுவோம் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 12, 2021, 09:48 PM IST
  • டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி
  • கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு
  • இன்று ஒரே நாளில் 15,108 பேருக்கு கொரோனா தொற்று
Tasmac: டாஸ்மாக் திறப்புக்கு எதிராக BJP ஜூன் 13 ஆர்ப்பாட்டம்- எல்.முருகன் title=

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சில நாட்களாக குறைந்து வருவதால், ஊரடங்கு உத்தரவில் தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பதாக நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin)  அறிவித்துள்ளார். இருப்பினும் இந்த ஊரடங்கு நீட்டிப்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தளர்வுகளின் ஒரு பகுதியாக, தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து தொற்று குறைந்து வரும் எஞ்சிய 27 மாவட்டங்களில் டாஸ்மாக் (TASMAC) கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.

ALSO READ | தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்; யாருக்கு இ-பாஸ் அவசியம்.. விபரம் உள்ளே

இந்த முடிவுக்கு தமிழக பாஜக மற்றும் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி கனிமொழி, தற்போதைய திமுக அரசின் அறிவிப்பிற்கு ஏன் மவுனம் காக்கிறார் என்று தமிழக பாஜக (BJP) எம்எல்ஏ வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan) கேள்வி எழுப்பியுள்ளார். 

ALSO READ | TASMAC: டாஸ்மாக் திறந்தது ஏன்; முதலவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து பாஜகவினர் தங்களது வீடுகளிலே கருப்புக் கொடி ஏந்தி போராடுவோம் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக அலுவலகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், பாஜக சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தற்பொழுது தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம் மேற்கொள்ள உள்ளது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News