Online Games-க்கு தாயின் Rs.90,000-ஐ செலவழித்த சிறுவன்! தந்தை புகட்டிய வினோத பாடம்!!
இந்த கொரோனா காலத்தில், குழந்தைகளிடம் செலவழிக்க நேரம் மிக அதிகமாக இருப்பதால், அவர்கள் மொபைல் ஃபோன்களின் அடிமைகளாகி விடுகிறார்கள். குழந்தைகள் மொபைலில் செலவழிக்கும் நேரத்தை குறைப்பதும், அவர்களை மற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பதும் பெற்றோர்களில் தலையாய கடமையாகும்.
மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் (Ramanathapuram District) உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனின் பெற்றோர் சமீபத்தில் ஒரு பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகினர். ஆன்லைன் விளையாட்டுகளை (Online Games) விளையாடுவதற்காக மூன்று மாதங்களில் அவர்களது மகன் தனது தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ .90,000 செலவிட்டுள்ளதைக் கண்டு அவர்களால் அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அண்மையில் அந்த சிறுவனின் தாயார் ATM-மில் இருந்து பணம் எடுக்கச் சென்றபோதுதான் அவர்கள் அதைப் பற்றி அறிந்தார்கள்.
சிறுவன் ஒரு Gaming App-ல் மிகவும் ஈர்க்கப்பட்டு இருந்ததாக பெற்றோர் கூறினர். வெளியே சென்று COVID-19 தொற்றுக்கு ஆளாவதற்கு பதிலாக வீட்டிலிருந்தே கேமிங்க் App-ல் விளையாடுவது சிறந்தது என எண்ணி தாங்கள் இதற்கு அனுமதித்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.
"கணக்கில் ரூ. 97,000 இருந்தது. அதில் பணம் செலுத்தும் அந்த கேமை விளையாட அவன் 90,000 ரூபாயை செலவழித்து விட்டான். நாங்கள் திட்டுவோம் என முதலில் அஞ்சினாலும், பின்னர் அவன் தான் செய்ததை ஒப்புக்கொண்டான்” என்று சிறுவனின் தந்தை செந்தில் குமார் தெரிவித்தார்.
ALSO READ: கழுத்தில் ஐ கார்டுடன் கடமையுணர்ச்சிடன் பணியாற்றும் Security Guard பூனை!
ஈ-சேவா மையத்தை நடத்தி வரும் செந்தில் குமார், ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதற்கு அவரது மனைவி சிறுவனின் உதவியை எடுத்துக் கொண்டார் என்றார். ஏழாம் வகுப்பு முடித்த சிறுவன், பணம் செலுத்துவது எப்படி என்று கற்றுக்கொண்டான். சிறுவனுக்கு ATM கார்டுக்கான அணுகல் இருந்ததால், அவருக்கு தடை ஏதும் இல்லாமல் போனது. வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருக்க, ஒவ்வொரு முறை கேமிற்கு பணம் கட்டியவுடனும், வங்கியில் இருந்து பெறப்பட்ட செய்திகளை சிறுவன் டெலீட் செய்து விட்டார். ஒரு பெரிய தொகையை இழந்த போதிலும் சிறுவனை தான் அடிக்கவில்லை என்று செந்தில்குமார் கூறுகிறார்.
அதற்கு பதிலாக, ஆன்லைன் விளையாட்டுகளின் (Online Games) பிடியிலிருந்து தன் மகனை செந்தில்குமார் விலக்க முயன்றார். ஆரம்பத்தில் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் செந்தில்குமார் ஒரு சிறிய பயிற்சியை முயற்சித்தார். சிறுவன் செய்த தவறுக்கு தண்டனையாக 1 முதல் 90,000 வரையிலான எண்களை எழுதுமாறு சிறுவனிடம் கூறினார். சிறுவன் எழுதத் தொடங்கினான். ஐந்து நாட்களில் 3,500- ஐத்தான் தாண்ட முடிந்ததால், இது அவனுக்கு மிகப்பெரிய பணியாக இருந்தது. "பின்னர், இதற்கு பதிலாக தான் மொபைல் கேம்களை விளையாடுவதையே விட்டுவிடுவதாக என் மகன் என்னிடம் கூறினான்" என்று செந்தில்குமார் நிம்மதியாகக் கூறுகிறார்.
இந்த கொரோனா காலத்தில், குழந்தைகளிடம் செலவழிக்க நேரம் மிக அதிகமாக இருப்பதால், அவர்கள் மொபைல் ஃபோன்களின் (Mobile Phones) அடிமைகளாகி விடுகிறார்கள். குழந்தைகள் மொபைலில் செலவழிக்கும் நேரத்தை குறைப்பதும், அவர்களை மற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பதும் பெற்றோர்களில் தலையாய கடமையாகும்.
ALSO READ: WOW... இனி உங்கள் வாட்ச்-யை டெபிட் கார்டு-ஆக பயன்படுத்தலாம்... எப்படி?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR