இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் என்னென்ன?
Tamilnadu Budget: தமிழக அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தேனரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
Tamilnadu Budget 2024: வரும் 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தேனரசு பிப்ரவரி 19ஆம் தேதியான இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். பின்பு, பிப்ரவரி 20-ம் தேதி தேதி விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மேலும், பிப்ரவரி 21-ம் தேதி பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் ஆகிய இரண்டும் காலை, மாலை என இரு அமர்வுகளில் நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பாஜகவை முழுமையாக ஆதரிக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!
சமீபத்தில் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் பெரிய அறிவிப்புகள் ஒன்றும் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், தமிழக அரசின் பட்ஜெட்டின் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுநர்கள் யார் யாருக்கு அதிக லாபம் அல்லது பாதிப்பு இருக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதில் தமிழக அரசின் ஏற்கனவே உள்ள சில திட்டங்களில் நீட்டிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுமை பெண் திட்டத்தில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டமானது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு, அவர்களின் உயர்கல்வியைத் தொடர ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல சமையல் எரிவாயு மானியம் தொடர்பான நீண்ட கால பிரச்சனைக்கு இந்த பட்ஜெட்டில் தீர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு 100 ரூபாய் மானியம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். அதே போல, அரசின் நிலையான விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் சர்க்கரை வழங்கும் திட்டமும் இந்த பட்ஜெட்டில் உள்ளத்தாக்கா கூறப்படுகிறது. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி முடியும் நேரத்தில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மிக முக்கியமானதாக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு இந்த பட்ஜெட்டில் விடை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
தமிழக அரசின் நிதி சுமையும் தற்போது அதிகளவில் உள்ளது. 2023-24 ஆம் ஆண்டில், தமிழக அரசின் வருவாய் மற்றும் செலவினம் ரூ. 3,08,056 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் வரை வருவாய் மற்றும் செலவு ரூ. 1,96,781.57 கோடியாக மட்டுமே இருந்தது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் எதிர்பார்க்காத அளவிற்கு பெரும் மழை வந்தது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் தென்மாவட்டங்களில் வெள்ள நிவாரணத்திற்காக தமிழக அரசு ரூ. 2,028 கோடி செலவிட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் மக்களவை தேர்தல் வரவுள்ளதால் அதனை கருத்தில் கொண்டும் சில அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ