Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. தற்போது உள்ள அரசின் பதவிக்காலம் 2024, ஜூன் 16ஆம் தேதி முடிவடையும் நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் நடைபெறும். அந்த வகையில் விரைவில் மக்களவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்காக நடத்தப்படும் பிரச்சாரம் குறித்து, தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த தடை விதித்துள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளான துண்டு பிரசுர விநியோகம், கோஷங்கள் எழுப்புதல், பேரணிகளில் குழந்தைகளை பயன்படுத்துதல், போஸ்டர் ஓட்டும் பணியில் குழந்தைகளை ஈடுபடுத்துதல் போன்ற பணிகளுக்கு எந்த வகையிலும், பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது
தேர்தல் பிரச்சாரங்களின் போது, வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் தூக்கிச் செல்வது, கோஷங்களை எழுப்ப பயன்படுத்துவது போன்ற பல காட்சிகளை பார்க்கலாம். இனி அது போன்ற வகையில் குழந்தைகளை பயன்படுத்திக் கொள்ளவோ, தேர்தல் பிரச்சார வாகனங்களில் அவர்களை ஏற்றி செல்வதற்கோ கிடையாது. எனினும் அரசியல் கட்சித் தலைவர்களின் அருகிலோ அல்லது கூட்டங்களிலோ பெற்றோருடன் குழந்தைகள் பங்கேற்றால் விதிமீறல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடைந்துள்ள கூட்டணிப் பேச்சு வார்த்தைகள்
மக்களவைத் தேர்தல் தேதிகள் (Lok Sabha Election Dates) விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. தேர்தல் பணிகளுக்கான குழுக்களை அமைத்து வியூகங்களை வகுத்து வருகின்றன. கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் போன்ற பணிகளையும் கட்சிகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளன.
மேலும் படிக்க | 80 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சராவது சிறைக்கு போவார்கள்! ஆருடம் சொல்லும் பாஜக!
2024 மக்களவை தேர்தலை சந்திக்க தயாராகும் திமுக
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆளும் கட்சியான திமுக (DMK) தேர்தலை சந்திக்க குழுக்களை அமைத்துள்ளதோடு, தங்களது தேர்தல் வாக்குறுதிக்கான யோசனைகளை தெரிவிக்க மக்களிடம் கருத்துக்கணிப்பு கேட்டுள்ளது. மறுபுறம், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக, தனது தலைமையில் கூட்டணி ஒன்றை உருவாக்க திட்டங்கள் தீட்டி வருகிறது.திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. எனினும் தொகுதி பங்கீடு குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
பாஜக தலைமையிலான கூட்டணி குறித்து வெளியாகியுள்ள தகவல்
பாராதீய ஜனதா கட்சித் (BJP) தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, மயிலாடுதுறை, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம் ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும், தேமுதிகவுக்கு கள்ளக்குறிச்சி உட்பட 2 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுக்கு திருச்சி, சிவகங்கை ஆகிய ஒதுக்கப்பட உள்ளதாகவும், ஓபிஎஸ் மகனுக்கு தேனி தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாகவும், பச்சமுத்துவுக்கு பெரம்பலூர், தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாகவும், ஏ.சி. சண்முகத்துக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாகவும், ஜி.கே.வாசனுக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு 16 தொகுதிகளை ஒதுக்கியது போக மீதமுள்ள 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன எடப்பாடி, டெல்லி பறந்த ஜி.கே.வாசன்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ