சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்பேற்றது. கொரோனா தொற்று பரவல் உச்சியில் இருந்தபோது ஆட்சிக்கு வந்த திமுக அரசு, பல கட்ட ஊரடங்குகள் மற்றும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பல முயற்சிகளை எடுத்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல துறை அமைச்சர்களும் தங்கள் துறைகளில் பல முன்னேற்றப் பணிகளையும் சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 


இன்னும் சில வாரங்களில் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.


இந்த நிலையில், பட்ஜெட் குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கை மாநில அரசின் தற்போதைய நிதி நிலைமையை பற்றி தெளிவுபடுத்தும் ஒரு அறிக்கையாகும். இந்த ஆண்டு பட்ஜெட்டிற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படப்போகும் வெள்ளை அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இருக்கக்கூடும் என பார்க்கலாம்.


தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பிக்கப்போகும் வெள்ளை அறிக்கையில் இருக்கக்கூடிய முக்கிய அம்சங்கள்:


- வெள்ளை அறிக்கையில், திமுக ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகிய ஆண்டு, அதாவது, 2011 ஆம் ஆண்டில் இருந்த நிதி நிலையும், தற்போது உள்ள நிதி நிலையும் ஒப்பிட்டுக் காட்டப்படும் என கூறப்படுகின்றது. 


ALSO READ: TN Budget மின்ன‌ணு முறையில் தாக்கல் செய்யப்படும் : சபாநாயகர் அப்பாவு


- 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகிய போது, தமிழகத்தின் மொத்த கடன் அளவு 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும், அதிமுக (AIADMK) அரசு பொறுப்பேற்று ஆட்சிபுறிந்த பத்து ஆண்டுகளில் இந்த கடன் அளவு 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த விரிவான விவரங்களும் அறிக்கையில் இடம்பெறக் கூடும்.


- யாரும் எதிர்பாராத கொரோனா பெருந்தொற்றால், அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சுமை பற்றியும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்படும். இந்த பெருந்தொற்று காரணமாக அரசின் செலவுகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளன. 


- கொரோனா காலத்தில், மக்களுக்கு பலவித நிவாரணங்கள் வழங்கப்பட்டன. அவற்றிற்கு ஆன சுமைகளும் அரசாங்கத்தின் நிதிச்சுமையை அதிகரித்துள்ளது. குறிப்பாக, திமுக (DMK) பொறுப்பேற்ற பிறகு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் மற்றும் 14 வகை பொருட்கள் அடங்கிய பை ஆகியவற்றை அளிப்பதற்கு மட்டும் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா நிவாரணம் பணிகளுக்கு ஆன செலவுக்கான விளக்கமும் அறிக்கையில் இருக்கலாம்.  


- மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 3 சதவிகிதத்திற்குள் இருக்க வேண்டும் என்று வரையறை உள்ளது. அதை தமிழக அரசு கடந்து விட்டது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். 


- தமிழக அரசின் நிதிநிலை தவிர பிற துறைகளான போகுவரத்துத்துறை, மின்வாரியம் ஆகியவற்றின் நிதி நிலை பற்றிய அறிவிப்புகளும் வெள்ளை அறிக்கையில் இடம் பெற வாய்ப்புள்ளது.


இந்த பட்ஜெட் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் மக்களின் சுமையை அதிகரிக்காத வண்ண இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். 


அதே சமயம், அரசுக்கும் கொரோனா தொற்றால் நிதி தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில், அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்வது அரசுக்கும் சவாலான விஷயமாகத்தான் இருக்கும். 


ALSO READ: தொழில்துறையில் நாங்கள் அமைத்த அடித்தளத்தை செம்மையாக பயன்படுத்துங்கள்: EPS


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR