’மஞ்சப்பைக்கு’ மாறும் தமிழகம்- பிளாஸ்டிக்கை ஒழிக்க புது இயக்கம்
பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்கும் விதமாக ’மீண்டும் மஞ்சப்பை’ என்ற புது இயக்கத்தை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பருவ நிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் சூழலில், அதனைக் கட்டுப்படுத்த உலகளவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகள் முதன்மையாக இருப்பதால், அவற்றின் பயன்பாட்டை குறைக்க உலக நாடுகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளினால் ஆறு, குளம், ஏரி மற்றும் கடல் மாசடைந்து, உயிரினங்களின் வளர்ச்சியை பாதிக்கின்றன. இந்தியாவில் 2019 - 20 ஆம் ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்துள்ளன. அதே ஆண்டில் தமிழகத்தில் ஏறத்தாழ 4 லட்சம் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்ததாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதேநிலை நீடித்தால் ஆறு, குளங்களில் நீருக்கு பதிலாக பிளாஸ்டிக் (Plastic) பொருட்கள் மட்டுமே இருக்கும் சூழல் உருவாகும். குறிப்பாக, ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் அதிக ஆபத்துகள் ஏற்படுவதால், அதனை தமிழக அரசு முழுமையாக தடை செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இதற்கான அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை பிறப்பித்துள்ளது. மீறுவோருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரையும், தொடர்ந்து அதே தவறை செய்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்தது.
ALSO READ | 75 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு
தனி நபர், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு முறையாக செயல்படுத்தப்படாததால் மெல்ல மெல்ல ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. இதனை முழுமையாக கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு புது இயக்கம் ஒன்றை தொடங்கவுள்ளது.
’மீண்டும் மஞ்சப்பை’ என்ற புதிய இயக்கத்தின் மூலம் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலும் ஒழித்து, மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கிராம ஊராட்சி அளவில் இது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள முடிவெடுத்துள்ள தமிழக அரசு (Tamil Nadu), மஞ்சப்பை மற்றும் பொட்டலம் கட்டும் முறையை நடைமுறைக்கு வருவது காலநிலை மாற்றத்துக்கு உகந்தது எனத் தெரிவித்துள்ளது. ஜெர்மன் நாட்டு அமைப்புடன் இணைந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை அன்றாடம் பயன்படுத்துவது குறித்து அடையாளம் காணப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. தமிழக அரசின் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பள்ளிக் கல்லூரி மாணவர்களும் பங்கெடுக்க உள்ளனர்.
ALSO READ | Tamil Nadu: முக்கிய நகரங்களைச் சுற்றி துணை நகரங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR