75 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு

ஒரு முறை பயன்படுத்திய பின் அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 3, 2021, 05:27 PM IST
75 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு title=

Plastic Ban in Tamil Nadu: சுற்றுச்சூழலை பாதுகாக்க மேற்கொள்ளும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தாடும் பிளாஸ்டிக் பொருட்களை (Single Use Plastic) தயாரித்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு பதிலாக அலுமினியத்தாள், வாழை இலை, கரும்பு சக்கையினால் செய்யப்பட்ட பொருட்கள், பாக்கு மர இலை, உலோகத்தாலான உள்ள பாத்திரங்கள், மரப்பொருட்கள் ஆகிய 12 வகை பொருட்களை பயன்படுத்தலாம் என அரசு தரப்பில் உத்தர பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும் தமிழகத்தில் (Tamil Nadu) பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பது குறையவில்லை. இதை அடுத்து, ஒரு முறை பயன்படுத்திய பின் அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. தடையை மீறுபவர்கள் மீது, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 

ALSO READ | பகீர் தகவல்! சட்டசபையில் ஒரு இரகசிய சுரங்கப்பாதை; வைரலாகும் புகைப்படங்கள்

இந்நிலையில், இன்று, 75 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்க செப்டெம்பர் மாதம் 30ம் தேதி முதல் தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 120 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தவும் 2023-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் பிரச்சனை சுற்று சூழல் பாதிக்கப்படுவதை தடுத்தல் ஆகியவை தொடர்பாக எடுக்கப்பட்ட மிக முக்கிய நடவடிக்கையாகும் என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சனை மட்டுமல்ல. இது உலகளாவிய பிரச்சனையாக உள்ளது. இதற்கு காரணம் சுற்று சூழல் பாதிப்பு. தொழிற்துறை வளர்ச்சி, காடுகள் அழிக்கப்படுதல், நீர் நிலைகளை அழித்தல் போன்றவற்றின் விளைவாக உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. 

ALSO READ Tamil Nadu: முக்கிய நகரங்களைச் சுற்றி துணை நகரங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News