சென்னை: தமிழகத்தில் முக்கிய நகரங்களைச் சுற்றி துணை நகரங்களை உருவாக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தொழிற்சாலை, சுகாதாரம், போக்குவரத்து , சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து மாநிலத்திலுள்ள பெரிய நகரங்களில் நெரிசலை தவிர்க்க முக்கிய நகரங்களைச் சுற்றி துணை நகரங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகரத்தில் உள்ள ஏழை மக்கள் மற்றும் குடிசைப் பகுதியில் வாழும் குடும்பங்களுக்கு 9.53 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: ஓ.பன்னீர்செல்வம் மனைவி மாரடைப்பால் காலமானார்
மேலும், பெரிய நகரங்களில் உள்ள மக்கள் தொகை நெரிசலை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும். அதுமட்டுமல்லாமல், சென்னை (Chennai) பெருநகரின் போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைந்த செயல்களை மெற்கொள்ளவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வண்டலூர் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்றும், இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ரூ.393 கோடி செலவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்படு வருகிறது.
தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தின் பெயர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) சட்டசபையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு; புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR