சென்னை: ஈரானில் (Iran) இருக்கும் தமிழகத்தைச் (Tamil Nadu) சேர்ந்த 40 மீனவர்களை நாட்டிற்கு திருப்பி அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் (Chief Minister) கே.பழனிசாமி (K Palanisamy) வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை (S Jaishankar) கேட்டுக்கொண்டுள்ளார். ஜூலை 1 ம் தேதி ஈரானில் இருந்து மீனவர்களை திருப்பி அழைத்து வந்த கப்பலில் இடம் இல்லாததால் அவர்கள் பின் தங்கிவிட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கருக்கு, ஜூலை 10 தேதி எழுதிய கடிதத்தில், பழனிசாமி அவர்கள், மே 19 தேதியிட்ட தனது முந்தைய கடிதத்தை நினைவு கூர்ந்தார். ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை ஈரானில் இருந்து தமிழகத்திற்கு திருப்பி அழைத்து வருமாறு தான் ஏற்கனவே கோரியதாகக் கூறினார்.


"அதன்படி, 681 மீனவர்கள் 2020 ஜூலை 1 ஆம் தேதி ஐ.என்.எஸ் ஜலஷ்வா (INS Jalashwa)  மூலம்   பாதுகாப்பாக தமிழகத்திற்கு திருப்பி அழைத்து வரப்பட்டனர். அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். மேலும், கப்பலில் இடம் போதாததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 40 மீனவர்கள் பின் தங்கிவிட்டனர். சிறப்பு விமானம் மூலம் தமிழகத்திற்கு விரைவாக அவர்களை திருப்பி அழ்ழைத்து வர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று முதல்வர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்தில் தெரிவித்தார்.


வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் குடிமக்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் "சமுத்ரா சேது" (Samudra Setu) திட்டத்தின் மூலம் 600 க்கும் மேற்பட்ட இந்தியர்களை ஈரானிலிருந்து இந்திய கடற்படை (Indian Navy) அழைத்து வந்துள்ளது.


ALSO READ: நீலகிரியில் ₹.447.32 கோடியில் அரசு மருத்துக் கல்லூரி; அடிக்கல் நாட்டினார் EPS!


இந்திய கடற்படைக் கப்பலான ஜலஷ்வா 687 இந்தியர்களை திருப்பி அழைத்து வந்தது. அவர்களில் பெரும்பாலோர் மீனவர்கள் (Fishermen). ஈரானில் இருந்து அவர்கள் ஜூலை 1 ம் தேதி தூத்துக்குடியில் உள்ள விஓசி துறைமுகத்திற்கு (VOC port) வந்தனர்.


இதற்கிடையில், வேலை மற்றும் வருமானம் இல்லாமல் ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்பதற்கு தேவையானவற்றை செய்யுமாறு சிபிஐ (எம்) தமிழக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சமீபத்தில் பழனிசாமிக்கு கடிதம் எழுதினார்.


அங்கிருந்து மீட்கப்படும் வரை, மீனவர்களுக்கு உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.


ALSO READ: 'இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது' என RK.சிங்கிடம் முதல்வர் வலியுறுத்தல்!