சென்னை: இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா விதிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக கோட்டையில் கொடியேற்றினார்.


நாட்டின் 75 ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். சுதந்திர தின விழாவில் காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றார் முதலமைச்சர் ஸ்டாலின். இதையடுத்து அவர் சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார். 



- தனக்கு கோட்டையில் கொடியேற்ற வாய்ப்பளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 


ALSO READ: 75வது சுதந்திர தினம்- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து


- ஏற்றதாழ்வு அற்ற, உயர்வு தாழ்வு அற்ற ஒருமனித உரிமைச் சமூகமாக மாற்றவேண்டும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


- மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் ரூ.6 கோடி செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


- கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 150-வது பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.


-  சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 


பல துறைகளில் பல வித விருதுகளையும் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். கொரோனா நோய்த்தொற்றில் (Coronavirus) சிறப்பு பணியாற்றிய மருத்துவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். 


சிறந்த மாநகராட்சிக்கான விருது தஞ்சாவூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. 


ALSO READ: Independence Day 2021: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR