தமிழகத்தில் தற்போது ஐப்பசி மாத அடைமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. சென்னையில் கனமழையினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மழை பாதித்த பகுதிகளில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இன்று இரண்டாவது நாளாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்வதற்காக துறைமுகம்,ராயபுரம், ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளுக்கு சென்றிருந்தார்.


பாதிக்கப்பட்ட பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாமையும் ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். 
ஆர்.கே. நகர் பகுதியில் இருந்து மகாகவி பாரதியார் நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுக் கொண்டிருந்தார்.


Also Read | தமிழகத்தில் கொட்டும் மழை! தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்


கவியரசு கண்ணதாசன் நகர் EB சந்திப்பில் உள்ள துர்கா மஹால் எனும் திருமண மண்டபத்தில் கௌரி சங்கர் - மகாலட்சுமி தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து வெளியே வந்துக் கொண்டிருந்தனர். முதலமைச்சர் செல்லும் வழியில் புதுமணத் தம்பதிகளைக் கண்டதும், அவர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து வாழ்த்துக்களை தெரிவித்தார். 


இதனால், திருமணத்தன்று இன்ப அதிர்ச்சி அடைந்த மணமக்கள், முதல்வரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். யாருமே எதிர்பாராத இந்த திடீர் நிகழ்வினால், அங்கிருந்த அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அங்கு சுமார் 10 நிமிடங்கள் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தவர்களின் ஆசைக்கு இணங்க புகைப்படம் எடுத்துக்கொண்டு, தனது ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தார். 


புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு எதிர்பாராமல் கிடைத்த இந்த மகிழ்ச்சி, திருமண வீட்டினரை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. தங்கள் திருமணத்திற்கு எதிர்பாராதவிதமாக தமிழக முதலமைச்சர் நேரில் வந்து வாழ்த்துவார் என்று நினைத்துக் கூட பார்த்திராத தம்பதிகளின் மகிழ்ச்சியும் கரைபுரண்டோடியது.


Read Also | ஹெலிகாப்டரில் வெள்ள மீட்புப் பணி - அமைச்சர் அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR