தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் (District Head Quarters) சிறை நிரப்பும் போராட்டங்களை தொடங்கும் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்‌ஷன் திட்டத்தை (Old Pension Scheme) அரசு அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ ஜியோவின் (Joint Action Council of Teachers’ Organisations - Government Employees’ Organisations (Jacto-Geo)) 2019-ம் ஆண்டு போராட்டம் நடத்தியது. 


2019ஆம் ஆண்டு, ஜனவரி 22-ந் தேதி தொடங்கிய போராட்டங்கள் (Agitation) 10 நாட்கள் தொடர்ந்தன. அதன்பிறகு நீதிமன்ற தலையீட்டின் தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பினார்கள். இந்த போராட்டத்தின்போது, தமிழ்நாடு முழுவதும் 5,068 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்குகள் (Disciplinary action) பதிவு செய்யப்பட்டிருந்தது.


Also Read | “டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்”: தமிழக அரசுக்கு விருது   


வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, அவர்களுக்கு பதவி உயர்வு (Promotion) கிடைக்கவில்லை என்றும், வழக்கை எதிர்கொள்பவர்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் (Pension) கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.


இதுகுறித்து அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தபோதிலும், அதை அரசு (Government) ஏற்கவில்லை என்பதால் பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


2019 போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளை (Cases) வாபஸ் பெற வேண்டும். ஒழுங்குமுறை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு தெரிவித்தார்.  


Also Read | பொங்கல் பரிசு: தமிழக அரசு மாலைக்குள் சுற்றறிக்கை வெளியிடாவிட்டால் HCஐ திமுக அணுகும்


ஜனவரி 19, 20 தேதிகளில் மண்டல (Zone) அளவில் போராடுவதற்கான முன்னேற்பாடுகளை திட்டமிட ’ஆயத்த மாநாடு’ நடத்துவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.  
அதன்பிறகு, பிப்ரவரி 2-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நடத்தி சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு தெரிவித்தார்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR