தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. 2020 - 21 கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், வரும் 4 ஆம் தேதி முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்  என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக தேர்வுத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், “மார்ச் 2021, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates) அனைத்து பள்ளி மாணவர்களும் 04.10.2021 அன்று காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 


மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் (Facemask) அணிந்திருக்க வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ: விண்வெளி தொழில்நுட்பத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் IIT-Madras


2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகை பற்றிக்கொண்ட கொரோனா தொற்று (Coronavirus) மக்களை பாடாய் படுத்தி வருகிறது. உலக மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிய நிலையில், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் பாதிக்கப்பட்டன. 


இதில் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டவர்களில் மாணவர்களும் அடங்குவர். பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன.


2020-2021 கல்வியாண்டில், 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது, அக்டோபர் 4 ஆம் தேதி முதல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.


பள்ளிகளுக்கு (TN Schools) வரும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவரும் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கல்வித்துறை கேட்டுக்கொள்டுள்ளது.  


ALSO READ: Samakra siksha: எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக மக்கள் பள்ளி தொடங்கப்படும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR