Samakra siksha: எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக மக்கள் பள்ளி தொடங்கப்படும்

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கான முயற்சிகள் தொடங்குகிறது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 30, 2021, 09:58 PM IST
  • தமிழகத்தில் மக்கள் பள்ளி தொடங்குகிறது
  • தன்னார்வலர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பிப்பார்கள்
  • முதலில் 8 மாவட்டங்களில் மக்கள் பள்ளி தொடங்கப்படும்
Samakra siksha: எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக மக்கள் பள்ளி தொடங்கப்படும் title=

சென்னை:தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கான முயற்சிகள் தொடங்குகிறது. தன்னார்வலர்கள் நாள்தோறும் ஒரு மணி நேரம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பார்கள்.  

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.  அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டாலும்  அவர்களிடம் கற்றல் குறைபாடு இருப்பது தெரியவந்தது,

அதன் அடிப்படையில், மாணவர்களின் கற்றல் குறைப்பாடுகளை தீர்க்க தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் கற்றல் இடைவெளி கொண்ட மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துவதற்காக தினமும் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரையில் மக்கள் பள்ளி திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
school

அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில்  பள்ளிக்கல்வித்துறையின் இந்த முன்முயற்சி திட்டம் குறித்து விவாதிக்கப்படும். எனவே கல்வித்துறை அலுவலர்கள் கிராமசபை கூட்டங்களில் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி,கடலூர் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் என 8 மாவட்டங்களில் இத்திட்டம் முதற் கட்டமாக முதலில் செயல்படுத்தப்படும். அக்டோபர் 18ம் தேதி தொடங்கப்பட உள்ள இந்தத் திட்டம், பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

முன்னதாக சமக்ரா ஷிக்ஷா அபியான்-2.0 திட்டத்திற்கு ஆகஸ்ட் நான்காம் தேதியன்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின் மூலம், பாலர் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து பரிமாணங்களும் உள்ளடக்கப்படும். புதிய கல்வி கொள்கை 2020 ன் பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கல்விக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் உட்பட. சமக்ரா ஷிக்ஷா அபியான்-2.0 இன் கீழ், மழலையர் வகுப்பு, ஸ்மார்ட் வகுப்பறை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கான ஏற்பாடுகள் என எதிர்வரும் ஆண்டுகளில் படிப்படியாக பள்ளிகளில் செய்யப்படும். இது தவிர, ஒரு உள்கட்டமைப்பு, தொழிற்கல்வி மற்றும் ஆக்கப்பூர்வமான கற்பித்தல் முறைகள் ஏற்பாடு செய்யப்படும்.

Also Read | சாவர்க்கர் நீக்கம், பெரியார் சேர்ப்பு: கன்னூர் பல்கலையில் புதிய பாடத்திட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

https://www.facebook.com/ZeeHindustanTamil

https://twitter.com/ZHindustanTamil

Trending News