தமிழகம் தொற்றை வெகுவாக கட்டுப்படுத்தி அதிலிருந்து மீண்டு வருகிறது: தமிழக முதல்வர்
வல்லுநர்கள் சமர்ப்பித்த சுகாதார அறிக்கைகள், நமது மாநிலம், தொற்றுநோயை வெகுவாகத் தடுத்து அதிலிருந்து மீண்டு வருகிறது என்பதைக் காட்டும் வகையில் உள்ளன என முதல்வர் கூறினார்.
சென்னை: சுகாதார நிபுணர்கள் மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக்குத் தலைமை தாங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தார். நாடு மெதுவாக அன்லாக் செயல்முறையை நோக்கி செல்வதால், வரவிருக்கும் பண்டிகை காலங்களில், மேலும் பின்பற்ற வேண்டிய SOP களை மாநில அரசு தீர்மானிக்க வேண்டும்.
வல்லுநர்கள் சமர்ப்பித்த சுகாதார அறிக்கைகள், நமது மாநிலம், தொற்றுநோயை வெகுவாகத் தடுத்து அதிலிருந்து மீண்டு வருகிறது என்பதைக் காட்டும் வகையில் உள்ளன என முதல்வர் கூறினார்.
கடினமான தருணங்களில் முன்னணியில் நின்று போராடிய அனைத்து முன்னணி வீரர்களுக்கும் கே பழனிசாமி (K Palanisamy) நன்றி செலுத்தினார். இந்த முன்னணி வீரர்கள் இல்லாமல் COVID-19 தொற்றில் தற்போது நாம் காணும் வீழ்ச்சி சாத்தியமாகியிருக்க முடியாது என முதல்வர் பாராட்டினார்.
ALSO READ: அரசு துறைகளில் புதிய பணியிடங்களை நிரப்பத் தடை இல்லை: புதிய அரசாணை வெளியீடு
தற்போதைய லாக்டௌன் காலம் அக்டோபர் 30 ஆம் தேதியுடன் முடிவடைவதால், லாக்டௌனுக்கான தற்போதைய வழிகாட்டுதல்களை நவம்பர் 30 வரை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழகத்தில் பின்பற்ற வேண்டிய மேலதிக உத்தரவுகளை குறித்து முடிவு செய்ய, மாவட்ட ஆட்சியர்களுடனான ஒரு சந்திப்பிற்கு முதல்வர் தலைமை தாங்கினார்.
அதன்படி, வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு நிபுணர் குழுவின் ஆலோசனையின் பேரில் மேலும் எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று EPS தெரிவித்தார். தொற்றுநோயை மேலும் கட்டுக்குள் வைக்க, நடைமுறையில் உள்ள SOP களுக்கு கட்டுப்படுமாறு அவர் மக்களையும் கேட்டுக்கொண்டார்.
நிபுணர் குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ALSO READ: 50% இட ஒதுக்கீடு இல்லை! சமூகநீதி மீது தாக்குதல் நடத்தும் அதிமுக - பாஜக: ஸ்டாலின் காட்டம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR