சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு மிக அதிகமாக உயர்ந்த வண்ணம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்திலும் தொற்றின் அளவு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்த நிலையில், தொற்றின் பரவலையும், தீவிரத்தையும் கட்டுக்குள் கொண்டு வர புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


கொரோனா தொற்று தொடர்பான முக்கியமான சில முடிவுகளை எடுப்பது பற்றி கலந்துரையாட நாளை சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு முதல்வர் முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறும் என்ற தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சட்டப் பேரவையில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 


ALSO READ: உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்


கொரோனா தொற்று (Coronavirus) தோடர்பான சில முக்கிய விஷயங்கள் பற்றி இந்த கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் செயல்முறை ஆகியவை பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகின்றது. 


இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர்களுடன் மற்றொருவரும் கலந்துகொள்ளலாம் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, அதிமுக (AIADMK) ஆட்சி நடைபெற்ற வேளையில், கொரோனா தொற்று, நீட் தேர்வு போன்ற பல முக்கிய விவகாரங்கள் பற்றி கலந்துரையாட அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டுமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


எனினும், அப்போதைய அரசு அதற்கு வெகுவாக செவி சாய்க்கவில்லை. தற்போது ஆட்சிக்கு வந்தவுடனேயே கொரோனா நெருக்கடியை சமாளிப்பதில் கருத்துகளை பரிமாறிக்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியிருப்பது அனைவராலும் பாராட்டப்படுகின்றது.  


ALSO READ: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படாது, ஒத்தி வைக்கப்படும்: கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR