கடந்த 12 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அன்றைய தினம் காலையில் உடல் சோர்வுடன் இருந்த நிலையிலும் அரசு சார்பில் நடந்த 2 முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். செம்மஞ்சேரியில் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்ட பிறகு மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது உடல் மேலும் சோர்வடைந்ததால் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு மதியம் வீட்டுக்கு வந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது உடல் நலம் மோசமான நிலையில் அவருக்கு உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதய பேரில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டதுடன் அதை உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார். ஆனால் சளி, இருமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்ததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு நுரையீரலில் 10 சதவீத அளவுக்கு சளி பாதிப்பு இருந்ததை தெரிவித்தனர். மேலும் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டனர். இதில் அவரது உடல்நிலை தேறி வந்தது.


மேலும் படிக்க | ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் - கர்நாடக முதல்வர் ட்வீட்



இந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் மருத்துவமனை நிர்வாகம் அவரது டிஸ்சார்ஜ் குறித்தும் அறிவிப்பி வெளியிட்டனர். அந்த வகையில் அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வீடு திரும்புவார் என்றும், ஒரு வாரத்திற்கு வீட்டில் இருந்தபடி ஓய்வெடுக்க வேண்டும் எனவும் மருத்துவமனை தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.



இதற்கிடையில் கொரோனாவின் பிடியிலிருந்து விடுதலை ஆகியிருந்த உலகநாடுகளை மீண்டும் கொரோனா சிறை பிடிக்க ஆரம்பித்துள்ளது. மூன்று அலைகள் ஓய்ந்ததை அடுத்து மக்கள் நிம்மதியடைந்திருந்தனர். ஆனால் சமீபமாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் அதிகளவே இருக்கிறது. இதனைத் தடுக்கும்பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.


அதுமட்டுமின்றி, மாஸ்க் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது மீறி வந்தால் அபராதம் வசூலிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களும் மாஸ்க் அணிந்தபடி வெளியே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கொரோனா தொற்று... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ