கொரோனாவின் பிடியிலிருந்து விடுதலை ஆகியிருந்த உலகநாடுகளை மீண்டும் கொரோனா சிறை பிடிக்க ஆரம்பித்துள்ளது. மூன்று அலைகள் ஓய்ந்ததை அடுத்து மக்கள் நிம்மதியடைந்திருந்தனர்.
ஆனால் சமீபமாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் அதிகளவே இருக்கிறது. இதனைத் தடுக்கும்பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்துவருகிறது.
#TamilNadu | #COVID19 | 13 July 2022
Today/Total - 2,269 / 35,08,526
Active Cases - 18,282
Discharged Today/Total - 2,697 / 34,52,216
Death Today/Total - 00 / 38,028
Samples Tested Today/Total - 29,126 / 6,75,54,242@
Test Positivity Rate (TPR) - 7.8%#TNCoronaUpdate #TN pic.twitter.com/bQ49rrBXMS— TNCoronaUpdates (@TNCoronaUpdate) July 13, 2022
அதுமட்டுமின்றி, மாஸ்க் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது மீறி வந்தால் அபராதம் வசூலிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களும் மாஸ்க் அணிந்தபடி வெளியே வருகின்றனர்.
சூழல் இப்படி இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் COVID19 உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என குறிப்பிட்டிருந்தார்.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
— M.K.Stalin (@mkstalin) July 12, 2022
இதனையடுத்து அவர் விரைவில் நலம்பெற வேண்டுமென்று பலரும் கூறிவந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | Nuclear Weapons Accord: இரான் அணுஆயுத ஒப்பந்தமும் ஜோ பிடனின் சூசக எச்சரிக்கையும்
இதுகுறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR