தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 27,936  என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் 2596 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்காக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை  3,01,781 என அறிக்கைகள் கூறுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் (Corona Virus) பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,39,716 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும்  கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,04,502. தமிழகம் முழுவதும் இதுவரை தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17,70,503. 


இதுவரை, தமிழகத்தில் பரிசோதிக்கப்ப்பட்ட மொத்தம்  மாதிரிகளின் எண்ணிக்கை 2,76,75,115. இன்று ஒரு நாளில் மட்டும் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,53,264


 இன்று குணமடைந்தவர்கள் 31,223 பேர். குணமடைந்தவர்களின் மொத்தம் எண்ணிக்கை 17,70,503 பேர்.


இன்று கொரோனா வைரஸ் தொற்றினால் 478 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 24,232  என்ற அளவில் உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 7091 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.



 



ALSO READ | COVISHIELD ஒரு டோஸ் போதுமா; ஆய்வுகள் அடிப்படையில் விரைவில் முடிவு?
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR