கொரோனா எண்ணிக்கையில் புதிய உச்சம்: தமிழகத்தில் இன்று 30,621 பேர் பாதிப்பு, 297 பேர் பலி
இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,621 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,99,485 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.
தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் என்ணிக்கை உயர்ந்து வருகிறது. புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொற்றின் பரவலைத் தடுக்க பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,621 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,99,485 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 6,991 பெர் புதிதாக தொற்றுக்கு ஆளானார்கள். இதனுடன் சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,19,261 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தமிழகத்தில் 297 பேர் தொற்று பாதிப்பால் இறந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 16,768 ஆக உயர்ந்துள்ளது.
ALSO READ: Covishield மிகப் பெரிய செய்தி: 2 டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது
இன்று தமிழகத்தில் மொத்தம் 19,287 நோயாளிகள் தொற்றிலிருந்து குணமாககியுள்ளனர். இதனுடன் தொற்று ஏற்பட்டு குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 12,98,945 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற மாநிலங்களைப் போலவே, 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை (Vaccine) இறக்குமதி செய்வதற்கான உலகளாவிய டெண்டர்களை பெறப்போவதாக தமிழகம் புதன்கிழமை அறிவித்தது. சென்னை கலைவனார் அரங்கத்தில் முதல்வர் எம்.கே.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
13 லட்சம் தடுப்பூசி குப்பிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது. எனினும், 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இது போதுமானதாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாட்களுக்கு முன்பு மாநில அரசு முழு ஊரடங்கை (Lockdown) அமலுக்கு கொண்டு வந்தது. அதற்கு முன்னர் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிறர் தங்கள் சொந்த ஊர்களுக்கு அவசரமாகத் திரும்பினர். அரசு பேருந்துகள் முழு திறனில் இயங்கினாலும், தொலைதூர பகுதிகளுக்கு பயணிக்க விரும்பிய பயணிகள் தனியார் பேருந்துகளைத் தேர்ந்தெடுத்தனர்.
ஊரடங்குக்கு இரு நாட்களுக்கு முன்னர் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அந்த இடைவெளியிலும் பலருக்கு தொற்று பரவி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
ALSO READ: ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம்
ALSO READ: கொரோனா பாதிப்பு: முதல்வர் தலைமையில் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR