கொரோனா பாதிப்பு: முதல்வர் தலைமையில் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. 

Written by - ZEE Bureau | Last Updated : May 13, 2021, 06:36 PM IST
  • சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்திற்கு நேற்று அழைப்பு விடுத்தார்.
  • கொரோனா தொற்று பரவல் தடுப்பு தொடர்பான பல முக்கிய நடவடிக்கைகள் இதில் ஆலோசிக்கப்பட்டன.
கொரோனா பாதிப்பு: முதல்வர் தலைமையில் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்

சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு மிக அதிகமாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்திலும் தொற்றின் அளவு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்த நிலையில், தொற்றின் பரவலையும், தீவிரத்தையும் கட்டுக்குள் கொண்டு வர புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா தொற்று (Coronavirus) தொடர்பான முக்கியமான சில முடிவுகளை எடுப்பது பற்றி கலந்துரையாட சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று அழைப்பு விடுத்தார். கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக அனைத்து சட்டமன்றக் கட்சி தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று 5:00 மணியளவில் தொடங்கியது.

ALSO READ: உலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்!: கொரோனா தொற்றுக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக, அதிமுக (AIADMK), காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, பாஜக, சிபிஎம், சிபிஐ, மமக, கொமதேக, தவாக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர்களுடன் மற்றொருவரும் கலந்துகொள்ளலாம் என்றும் அரசு சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கூட்டத்தைத் துவக்கி வைத்து பேசிய மு.க,.ஸ்டாலின் (MK Stalin), போர்க்கால அடிப்படையில், மகக்ளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். தனது தலைமையிலான அரசில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்றும் அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளைப் பெறவே இன்று கூட்டம் கூட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஊரடங்கு தளர்வுகளை நீக்கலாமா அல்லது மாற்றம் செய்யலாமா என்பதை கட்சிப் பிரதிநிதிகள் கூறலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஊரடங்கு கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல் சிலர் வெளியே வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, கொரோனா தடுப்பு பணிகளுக்கு தங்களாலான உதவிகளை செய்யுமாறு தமிழக முதல்வர் ஏற்கனவே பொது மக்களிடம் கேட்டிருந்தார். தற்போது அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கைக்கு மத்தியில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி வழங்குங்கள் என்று வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ALSO READ: கொரோனா பாதிப்பு: சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து 

வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News