TN District Wise corona update August 01: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக கோவிட் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இது கவலையளிப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,990 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,61,587ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 175 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 230 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 180 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை புதிய கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் 175 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:
கோயம்புத்தூர் - 230
ஈரோடு - 180
சென்னை- 175
செங்கல்பட்டு - 133
தஞ்சாவூர் - 126
Also Read | COVID-19 Update August 01: இன்றைய கொரோனா பாதிப்பு 1,990; 26 பேர் உயிரிழப்பு
இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:
அரியலூர் 25
செங்கல்பட்டு 133
சென்னை 175
கோயம்புத்தூர் 230
கடலூர் 64
தர்மபுரி 30
திண்டுக்கல் 15
ஈரோடு 180
கள்ளக்குறிச்சி 51
காஞ்சிபுரம் 43
கன்னியாகுமரி 31
கரூர் 13
கிருஷ்ணகிரி 34
மதுரை 24
மயிலாடுதுறை 15
நாகப்பட்டினம் 45
நாமக்கல் 58
நீலகிரி 49
பெரம்பலூர் 8
புதுக்கோட்டை 25
ராமநாதபுரம் 10
ராணிப்பேட்டை 15
சேலம் 79
சிவகங்கை 23
தென்காசி 10
தஞ்சாவூர் 126
தேனி 12
திருப்பத்தூர் 18
திருவள்ளூர் 95
திருவண்ணாமலை 38
திருவாரூர் 50
தூத்துக்குடி 14
திருநெல்வேலி 17
திருப்பூர் 95
திருச்சி 69
வேலூர் 29
விழுப்புரம் 27
விருதுநகர் 15
Also Read | சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 7 மார்க்கெட்கள் ஆகஸ்ட் 9 வரை மூடப்பட்டது
தமிழகத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக கோவிட் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இது கவலையளிப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்த டிவிட்டர் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று அனைவரது வாழ்க்கையையும் முடக்கிப்போட்டிருக்கும் காலகட்டத்தில், இதிலிருந்து மீள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புக்கொடுத்து விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம், மூன்றாவது அலை ஏற்படாமல் தடுப்போம் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை காண்பித்தும் தமிழகத்திற்குள் வரலாம்.ரயிலில் வருபவர்களுக்கும் இது பொருந்தும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Also Read | தமிழகத்தில் 3வது அலையை தடுக்க நடவடிக்கை: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR