தாலிக்குத் தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர், அம்மா கிளீனிக் உள்ளிட்ட அதிமுக கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இரு தினங்களுக்கு அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் ஓபிஎஸ் தலைமையிலும் திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


இந்நிலையில் இன்று விழுப்புரத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.வி.சண்முகம் தாலிக்குத் தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர், அம்மா கிளீனிக் உள்ளிட்ட அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக கிடப்பில் போட்டுவிட்டது. 


மேலும் படிக்க | சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தில் மூன்றாவது வெற்றி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்


மாதந்தோறும் மாணவர்களுக்கு ரூ 1000 உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்துவதாக பொய் கூறுகிறது. கொரோனாவால் மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது சொத்துவரியை 200 சதவீதம் அளவுக்கு உயர்த்தினால் எப்படி என்ற கேள்வியை எழுப்பினார். 



பழைய பேருந்து நிலையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக போலீஸார் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் சிவி சண்முகம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அவரை கைது செய்வதாக போலீஸார் மைக்கில் கூறினர். 


இதையடுத்து சிவி சண்முகத்தை கைது செய்து அழைத்து சென்ற போலீஸ் வாகனத்தின் முன் அதிமுகவினர் தடுத்ததால் அங்கு போலீசாருக்கும் அதிமுக-வினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து சி.வி.சண்முகம் அவர்களை கலைந்து போக சொல்லி போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதையடுத்து சிவி சண்முகம் ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.


மேலும் படிக்க | கடத்தப்பட்ட 3 மணிநேரத்தில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; அசத்திய சென்னை போலீஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR