தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு
தமிழகத்தில் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அனைத்து மாநில அரசுகளும் ஈடுபட்டுள்ளன. மார்ச் 24-ம் முதல் நாடு தழுவிய அளவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அதனை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்துள்ளன.
பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான முதலமைச்சர்கள் ஊரடங்கை இம்மாத இறுதி வரை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதனிடையே தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,035 ஆக உள்ளது.