மத்திய அரசின் திட்டங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தரும் தமிழக அரசு
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது தமிழக அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது தமிழக அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை சாஸ்திரி பவனில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், "நேற்று முன்தினம் இந்திய வரலாற்றில் சிறப்பான நிகழ்வாக தமிழகத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. செஸ் தோன்றிய இடமான தமிழகத்தில் தமிழ் மண்ணில் இந்த நிகழ்வு நடைபெறுவது தமிழர்களுக்கு பெருமை. அதே போல் அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்று இருப்பது அண்ணா பல்கலை கழகத்துக்கு பெருமை. 75வது சுதந்திர பெருவிழாவை கொண்டாடும் விதமாக பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஜனாதிபதி பொறுப்பை ஏற்று உள்ளார்.
மேலும் படிக்க | பிரம்மாண்டமாகத் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி
ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடு தோறும் மூவர்ன கொடியை ஏற்றும் இயக்கத்தை தொடங்க உள்ளோம். இந்த மூவர்ன கொடியை ஒவ்வொரு வீடுகளில் ஏற்றுவதன் மூலம் சுதந்திரத்திற்காக பாடுபடும் தலைவர்களை நினைவு கூறுவதோடு மட்டுமல்லாமல் இளைஞர்களும் சுதந்திரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் அமையும் தமிழகத்தில் உள்ள அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.
தமிழகத்தில் 534 கிராமங்கள் பிரமரின் டிஜிட்டல் இந்தியாவின் கீழ் உள்ள 26000 கோடி ஒதுக்கீடு செய்து 4ஜி இணைய சேவை அளிக்கப்பட உள்ளது. 200 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
செப்டம்பர் 17 ஆம் தேதி சர்வதேச கடல்கரைகள் தூய்மைப்படுத்தும் இயக்கம் மிக பெரிய அளவில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளது. கடற்கரையை பாதுகாப்பதும் தூய்மையாக வைப்பதும் நமது அனைவரின் கடமை. சென்னை காசிமெடு, மெரினா கடற்கரை, தூத்துக்குடி, தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை தூய்மைப்படுத்தும் மாபெரும் இயக்கமாக இந்த இயக்கம் நடைபெற உள்ளது. 2047 ல் வல்லமை மிக்க ஆற்றல்மிகுந்த தேசமாக இந்தியா இருக்க வேண்டும்.
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறது. குறிப்பாக மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது தமிழக அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது. என்எல்சி நிறுவனத்தில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன்., மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் வெளிப்படை தன்மையோடு தேர்வு நடைபெறுகிறது. மத்திய அரசின் பணிகளுக்கு தமிழர்கள் அதிகப்படியாக விண்ணப்பிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக இளைஞர்களுக்கு வேண்டுகோளாக விடுகிறேன் என கேட்டுக்கொண்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ