சென்னை: கொரோனா பெருந்தொற்று சென்ற ஆண்டில் இருந்து தனது கொடும் பிடியில் உலகை சிக்க வைத்துள்ளது. பலரின் வாழ்வாதரம் பறிபோனால், உயிர்பலியின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. பல குடும்பங்கள் நிர்கதியாய் நிற்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் சற்றுக் குறையத் தொடங்கியிருக்கிறது. ஆனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையவில்லை. பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அநாதரவாக நிற்கின்றனர். கொரொனாவால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளுக்கு தமிழக அரசு 5 லட்ச ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளது.


இது தொடர்பாக இன்று தமிழக அரசு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் தாய் தந்தை என பெற்றோர் இருவரையும் இழந்து தவிக்கும் குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத் தொகை போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத் தொகை போடப்படும். அந்தக் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகும்போது, சேர்ந்திருக்கும் வட்டியுடன் சேர்த்து ஐந்து லட்ச ரூபாயும் கிடைக்கும், இது அவர்களின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


அந்தக் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையில் கல்விக்கான செலவையும், தங்கும் விடுதிக்கான செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கொரோனா தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையுடன் இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


Also Read | AP Corona Relief Fund: கொரோனாவினால் இறப்பவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி


குழந்தைகளை பாதுகாவலர் கவனித்துக் கொண்டால், அவர்களுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எந்தவொரு குழந்தையையும் தமிழக அரசு கைவிடாது என்று அறிவித்திருக்கிறார்.


முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றானர். இதே போன்ற அறிவிப்பை இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, ஆந்திர மாநில அரசு வெளியிட்டு பாராட்டுகளை அள்ளிச் சென்றது.


கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்திருந்தது. அதேபோல், ஆந்திர மாநிலத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.


Also Read | Positive Angle of  Corona: லேசான கொரோனா பாதிப்பு நோயெதிர்ப்பை அதிகரிக்கும்   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR