நாடு முழுவதும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் கொதிப்பில் இருக்கின்றனர். பெட்ரோல் டீசல் விலை ஒருபுறம் கிடுகிடுவென உயர்ந்திருக்க, அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் பின்னணியில் ஜிஎஸ்டி வரியின் தாக்கம் இருப்பதாக வணிகர்கள் உள்ளிட்டோர் கூறுகின்றனர். ஏழை மக்களைப் பொறுத்தவரையில் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமடைந்திருப்பதாகவும், அதற்கேற்ற வேலை மற்றும் ஊதியம் இல்லாத நிலையே இருக்கிறது என கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | I.N.D.I.A. கூட்டணி: நான்காவது கூட்டம் தமிழ்நாட்டிலா?


இதனையே எதிர்வரும் தேர்தலில் பிரதான பிரச்சனையாக எதிரொலிக்க இருக்கிறது. இது குறித்து மத்திய அரசும் உணர்ந்ததால் உடனடியாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சிலிண்டர் விலையில் இருந்து 200 ரூபாயை அதிரடியாக குறைப்பதாக அறிவித்தது. அதேபோல் எதிர்வரும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இன்னும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மனநிலை மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி அரசு பல்வேறு வாக்குறுதிகளை தேர்தலில் அறிவித்தது. சிலிண்டர் விலை பாதியாக குறையும், பெட்ரோல் டீசல் விலை 50 ரூபாய்க்கு கீழே இருக்கும் என்றெல்லாம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொடுத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு சிலிண்டர் விலை 450 ரூபாயில் இருந்து ஆயிரத்து 100 ரூபாயை எட்டிவிட்டது. அதில் இருந்து இப்போது 200 ரூபாயை குறைத்திருக்கிறார்கள் என்ற பேச்சு பொதுத் தளத்தில் உள்ளது.



ஏற்றிய விலையில் இருந்து தானே குறைத்திருக்கிறீர்கள் என்று சாமானியர்கள் கேட்கின்றனர். இந்த சூழலில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் டிவிட்டரில் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி ஒரு டிவிட்டர் பதிவை பதிவிட்டுள்ளார். அதில், " இதுதான் மோடி அரசின் சாதனையா?? இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருள்களின் விலை 65 சதவீதம் உயர்ந்துள்ளது.  அதே நேரம் 2014-ல் 50000 கோடியாக இருந்த அதானி சொத்து மதிப்பு தற்போது 4.80 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது." என தெரிவித்துள்ளார். அதாவது சாமானியர்கள் கஷ்டத்தில் இருக்கும் நேரத்தில் அதானியின் சொத்து மதிப்பு மட்டும் கிடுகிடுவென உயர்வதன் மர்மம் என்ன? மோடி அரசு யாருக்கான அரசு? என்ற கேள்விகளின் அடிப்படையில் இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | "பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?" எடப்பாடி பழனிசாமி கேள்வி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ