தமிழகத்தில் 30,000-ஐத் தாண்டியது ஒரு நாள் தொற்றின் அளவு: இன்று 30355 பாதிப்பு, 293 பேர் பலி
இன்று தமிழகத்தில் 30,355 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 293 பேர் இறந்த நிலையில், 19,508 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னை: கொரோனா தொற்றின் தீவிரமும் பரவும் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகின்றது.
தமிழத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு உயர்ந்துகொண்டே உள்ளது. இன்றைய தொற்று எண்ணிக்கை 30,000-ஐத் தாண்டியுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இன்று தமிழகத்தில் 30,355 பேர் கொரோனா தொற்றால் (Coronavirus) புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 293 பேர் இறந்த நிலையில், 19,508 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 1,72,735 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனுடன் தமிழகத்தில் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,68,864 ஆக உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 16,471 ஆக உள்ளது. இதுவரை 12,79,658 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் இன்றைய தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு:
சென்னையில் (Chennai) இன்று 7,564 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 2,670, கோவையில் 2,636, திருவள்ளூரில் 1,3444, மதுரையில் 1,172, தென்காசியில் 324, நாகையில் 322, திருவாரூரில் 310, புதுக்கோட்டையில் 263, கரூரில் 246, தேனியில் 438, திண்டுக்கல்லில் 358, நாமக்கல்லில் 354, ராமநாதபுரத்தில் 333, திருப்பத்தூரில் 329, வேலூரில் 577, விழுப்புரத்தில் 568, விருதுநகரில் 535, கடலூரில் 530, கிரஷ்ணகிரியில் 497, காஞ்சிபுரத்தில் 767, சேலத்தில் 664, திருப்பூரில் 647, தஞ்சையில் 646, திருவண்ணாமலையில் 600, கன்னியாகுமரியில் 1,076, ஈரோடில் 961, திருச்சியில் 879, தூத்துக்குடியில் 748, நெல்லையில் 742 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
ALSO READ: உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இன்றைய தொற்று நிலவரத்தின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- 12 வயதுக்குட்பட்ட 1091 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 64 பேர் இன்று உயிரிழப்பு.
- கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 67 பேர் உயிரழப்பு.
- சென்னையையை சேர்ந்த 2 ஆண் குழந்தைகள் (1) இன்று கொரோனாவால் உயிரிழப்பு.
- சென்னையில் மட்டும் இன்று கொரோனாவால் 89 பேர் உயிரிழப்பு.
- சென்னையில் 4 ஆவது நாளாக 7000-துக்கு மேல் ஒற்றை நாள் தொற்று எண்ணிக்கை பதிவு.
- இன்று வெளி மாநிலங்களிலிருந்து வந்த 19 பேருக்கு தொற்று உறுதி.
இதற்கிடையில், கொரோனா தொற்று தொடர்பான முக்கியமான சில முடிவுகளை எடுப்பது பற்றி கலந்துரையாட நாளை சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு முதல்வர் முக.ஸ்டாலின் (MK Stalin) அழைப்பு விடுத்துள்ளார்.
ALSO READ: கொரோனா பாதிப்பு: சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR