சென்னை மண்டலங்களுக்கு தலா 3 கோவிட் சிறப்பு வாகனங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 3 கோவிட் சிறப்பு அவசர வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : May 12, 2021, 07:20 PM IST
  • சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 3 கோவிட் சிறப்பு அவசர வாகனங்கள் ஒதுக்கீடு-சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி.
  • அறிகுறி இருப்பவர்களும், தடுப்பூசி போட தடுப்பூசி மையங்களுக்கு செல்பவர்களும் இந்த கோவிட் சிறப்பு வாகனங்களை பயன்படுத்தலாம்.
  • அடுத்த 2 வாரங்களில் தொற்றின் அளவு உச்சத்தைத் தொடும் என அமெரிக்காவின் சுகாதார மதிப்பீடு ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை.
சென்னை மண்டலங்களுக்கு தலா 3 கோவிட் சிறப்பு வாகனங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு மிக அதிகமாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்திலும் தொற்றின் அளவு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்த நிலையில், தொற்றின் பரவலையும், தீவிரத்தையும் கட்டுக்குள் கொண்டு வர புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது குறித்த சில சந்திப்புகளை இன்று மேற்கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்  சிங் பேடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்  சிங் பேடி அளித்த தகவல்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 

- சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 3 கோவிட் சிறப்பு அவசர வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

- கொரோனா தொற்றுக்கான (Coronavirus) அறிகுறி இருப்பவர்களும், தடுப்பூசி போட மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி மையங்களுக்கு செல்பவர்களும் இந்த கோவிட் சிறப்பு வாகனங்களை பயன்படுத்தலாம் என ககன்தீப் சிங் கூறியுள்ளார். 

- இரண்டாவது அலையில், அறிகுறிகள் தாமதமாக தென்படுவதால், பரிசோதனை செய்து, முடிவுக்காக காத்திருக்கும் அறிகுறி கொண்ட அனைவருக்கும் உடனே மருந்து கிட்களை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்  சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

- தேவை இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளுக்கு வருமாறும் அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறும் ககன்தீப் சிங் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ALSO READ: உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில், அடுத்த 2 வாரங்களில் தொற்றின் அளவு உச்சத்தைத் தொடும் என அமெரிக்காவின் சுகாதார மதிப்பீடு ஆய்வு நிறுவனமான ஐ.எச்.எம்.இ. எச்சரித்துள்ளது. மேலும் ஒரு நாள் இறப்பு எண்ணிக்கையும் 850 ஆக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொற்று பரவலைத் தடுப்பதற்கான வழிகளையும் இந்த ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொற்று பரவல் வேகத்தை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தடுப்பூசி (Vaccine) செலுத்திய பிறகு கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்காது என்றும் ஐ.எச்.எம்.ஐ. தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால், தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்காது என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே கொரோனா தொற்றின் தீவிரத்திலிருந்து மக்களை காக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். 

ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்களின் ஒரு ஆய்விலும், மே மாதத்தில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் பன்மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி விழிப்புணர்வுடன் இருந்து, அனைத்து வித வழிகாட்டுதலக்ளை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு (TN Government) ஏற்கனவே மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அடிப்படை சேவைகள் தவிர அனைத்து வித நடமாட்டங்களுக்கும், கடைகளுக்கும், போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. 

ALSO READ:CM MK stalin: உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் நிவாரணம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News