முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் ஆன எடப்பாடி பழனிசாமி, கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவரும் ஆன எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கடந்த சில வாரங்களாக குடலிறக்க அறுவை சிகிச்சையின் காரணமாக, வயிற்றில் தொற்று ஏற்பட்டு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  எனவே, அவரை சிகிச்சைக்காக் உடனடியாக மருத்துவமனையில் சேர மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில்  அவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


ALSO READ | அதிகாரிகளை மிரட்டும் அராஜகப் போக்கை திமுக-வினர் நிறுத்த வேண்டும்: EPS


பசும்பொன் கிராமத்தில் உள்ள பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் நினைவிடத்தில் தேவர் குருபூஜை நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில்,  அதில் அதிமுகவை சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம் (OPS) உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது உடல் நிலை காரணமாக, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்பது குறித்த தெளிவான தகவல் ஏதும் இல்லை.


முன்னதாக, தமிழகத்தில் ஆட்சிபுரிந்து வரும் திமுக அரசு, அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டும் அராஜகப் போக்கை நிறுத்த வேண்டும் என அதிமுக இணை பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார்.


ALSO READ: ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி! விளக்கம் அளித்த லதா ரஜினிகாந்த்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR