தமிழகத்தில் கொரோனாவை வென்று வீழ்த்திய முதல் மாவட்டமானது பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலுமாக விடுபட்ட தமிழ்நாட்டின் முதல் மாவட்டமாகியுள்ளது.
சென்னை: கொரோனா தொற்று உலக மக்களை பாடாய் படுத்தி வருகிறது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகத்தின் பெயர் இருந்தாலும், இப்போது தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கையும், இறப்புகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றிலிருந்து முற்றிலுமாக விடுபட்ட தமிழ்நாட்டின் முதல் மாவட்டமாகியுள்ளது.
மாவட்டத்தில் COVID-19 இலிருந்து இதுவரை 2,228 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் COVID-19 தொற்றால் பாதிக்கப்படவில்லை.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை வெறும் 33 ஆகும். இது பிராந்தியத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
ALSO READ: மீண்டும் அதிகரிக்கும் COVID தொற்றின் எண்ணிக்கை பீதியை அளிக்கிறது: WHO
பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 21 பேர் கொரோனா வைரஸால் உயிர் இழந்தனர்.
நேற்று மாலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தினசரி செய்திக்குறிப்பின் படி, தலைநகர் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 497 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன், இங்கு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 2,09,167 ஐ எட்டியுள்ளது.
சென்னையின் அண்டை மாவட்டங்களைப் பொருத்தவரை, செங்கல்பட்டில் புதிதாக 118 பேரும், காஞ்சீபுரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேரும், திருவள்ளூரில் 83 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடலூர் மற்றும் கோவையில் திங்கள்கிழமை முறையே 28 மற்றும் 174 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 17 கோவிட் -19 நோயாளிகள் இறந்தனர். இதன் மூலம் தொற்றுநோயால் மாநிலத்தில் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 11,495 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாக, 2,384 நோயாளிகள் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து நேற்று குணமாகி வீடு திரும்பியதாக அரசின் செய்தியறிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் மொத்தமாக இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,32,656-ஐ எட்டியுள்ளது.
ALSO READ: Good news: 30 விநாடிகளில் கொரோனாவை காலி செய்யும் mouthwash-ஆய்வு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR