தபால்காரரே தலை வணங்குகிறோம்!! மாபெரும் மனிதர்கள்!!
தபால்துறையில் பணிபுரியும் தபால்காரர் டி சிவன், தமிழ்நாட்டின் குன்னூர் மலைப்பகுதிகளில் ஒவ்வொரு நாளும் 15 கி.மீ தூரம் நடந்து சென்று, தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு கடிதங்களை வழங்கி வந்தார்.
தபால்துறையில் (Postal Department) பணிபுரியும் தபால்காரர் டி சிவன்(D Sivan), தமிழ்நாட்டின் (Tamil Ndu) குன்னூர் மலைப்பகுதிகளில் ஒவ்வொரு நாளும் 15 கி.மீ தூரம் நடந்து சென்று, தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு கடிதங்களை வழங்கி வந்தார்.
தனது முழு வாழ்க்கையையும் தான் செய்த தபால்துறை பணிக்காக அர்ப்பணித்த சிவன், 30 வருட சேவைக்குப் பிறகு தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.
குன்னூரின் (Coonoor) மலைப்பாங்கான நிலப்பரப்பு வழியாக ஒவ்வொரு நாளும் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு மலையேற்றமாக நடந்து சென்று தபால்களை மக்களிடம் சேர்த்து வந்தார். அவர் தற்போது தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 66 வயதான இந்த தபால்காரர் (Postman) தனது பணியில் ஈடுபட்டிருந்த போது, நீலகிரி மலை ரயில் பாதையில், பலமுறை யானைகளால் துரத்தப்பட்டுள்ளதாகவும், பல சந்தர்பங்களில் பாம்புகள், கரடிகள் மற்றும் பிற காட்டு விலங்குகளையும் கண்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
2016 ஆம் ஆண்டில் ஒரு பிரபல நாளிதழில் வெய்யிடப்பட்ட அறிக்கையின் படி, அவருக்கு மாதத்திற்கு ரூ .12,000 சம்பளம் வழங்கப்பட்டது.
இந்த தபால்காரர் பற்றிய தகவல்களை தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துகொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு (Supriya Sahu), சிவனின் அர்ப்பணிப்புப் பணிகளைப் பாராட்டியதோடு அவர் ஓய்வு பெற்றதைப் பற்றியும் கூறியுள்ளார்.
“தபால்காரர் டி.சிவன், கடந்த வாரம் ஓய்வு பெறும் வரை குன்னூரில் அணுக முடியாத பகுதிகளில், தபால்களை மக்களுக்கு வழங்க, தினமும் 15 கி.மீ. பல ஆபத்துகளைத் தாண்டி, காட்டு யானைகள், கரடிகள் மற்றும் பல மிருகங்களால் துரத்தப்பட்டு, வழுக்கலான நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் கடந்து சென்று 30 ஆண்டுகளாக மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது கடமையைச் செய்துள்ளார், ”என்று சாஹு எழுதினார்.
அவரது உறுதியைக் கண்டு ட்விட்டரில் பலர் அவரை வெகுவாகப் பாராட்டினர்.
ALSO READ: இயல்பு நிலைக்கு திரும்பும் இந்திய பொருளாதாரம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்
சாஹுவின் இடுகை ட்விட்டரில் 22,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றது.
தபால்கார் டி.சிவன் ஒரு "உண்மையான சூப்பர் ஹீரோ" என்று பலர் பாராட்டினர். "கீழ்மட்ட மக்களின் வீட்டு வாசல்கள் வரை அவர் அரசாங்கத்தின் வளர்ச்சிப் பணிகளின் பயன்களைக் கொண்டு சென்றுள்ளார்” என்று ஒருவர் தன் ட்விட்டரில் குறிப்பிட்டார்.