தமிழ்நாடு என்று சொல்வதற்கே சிலருக்கு பிடிக்கவில்லை - அமைச்சர் கீதா ஜீவன்
திராவிடன் என்ற வார்த்தையை கேட்டதும் சிலருக்கு பயங்கரமாக வயிறு எரிகிறது, தமிழ்நாடு என்று சொல்வதற்கே சிலருக்கு பிடிக்கவில்லை என அமைச்சர் கீதா ஜீவன் பாஜகவை விமர்சித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தில் திமுக சார்பில் மொழிப்பேர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகள் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும். இந்தி திணிப்பினை எதிர்த்தும், இந்தி திணிப்பினை அறவே ஒழிக்க வலியுறுத்தியும், இந்தி ஒழிக என்று திமுகவினர் போராடி சிறை சென்றனர். அதே கொள்கையில் திமுக இன்றும் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
இன்றைக்கும் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். ஒரு விண்ணப்பத்தில் ஆங்கிலமும், இந்தியும் இருந்தால் அதனை நம்மில் பலரால் நிரப்ப முடியாது. ஆங்கிலமும் நமக்கு சரியாக வரவில்லை என்பதால் தமிழும் இருக்க வேண்டும் என்கிறோம். இந்தி படிக்க கூடாது என்று சொல்லவில்லை, இந்தியை திணிக்க கூடாது என்கிறோம். மும்மொழி இருக்கட்டும், தமிழும் இருக்கட்டும். ஆனால் இன்றைக்குள்ள மத்திய ஆட்சியாளர்கள் இந்தியுடன், சமஸ்கிருஸ்தனத்தினை திணிக்கின்றனர். தமிழ் மொழி செம்மொழி, தமிழ் மொழி, தமிழர்கள் தொன்மையை குறித்து கீழடி, ஆதிச்சநல்லூர் பாறை சாற்றுகிறது.
தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பெருமை, தொன்மையை மறைக்க, ஒழிக்க ஒரு கூட்டம் இன்னும் சதி சொல்கிறது. தமிழ் மொழியினை காத்தால் தான் தமிழ் இனத்தினை காத்திட முடியும் என்று தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் அரும்பாடுபட்டனர். கொள்கைகளை விட்டுக்கொடுக்கமால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். நான் திராவிடன் என்று முதல்வர் மு.கஸ்டாலின் தைரியமாக பதிவு செய்கிறார்.
திராவிடன் என்ற வார்த்தையை கேட்டதும் சிலருக்கு பயங்கரமாக வயிறு எரிகிறது. தூக்கம் வரமாட்டுக்கிறது. தேசிய கீதத்தில் கூட திராவிடம் என்ற வார்த்தை உள்ளது. எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், இடைஞ்சல் கொடுத்தாலும், தமிழ் மொழி, தமிழ் இனத்தினை காக்க வேண்டும், தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்பதற்காகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி புரிந்து வருகிறார். திட்டம் தீட்டி வருகிறார். தமிழ்நாடு என்று சொல்வதற்கே சிலருக்கு பிடிக்கவில்லை என்றார்.
மேலும் படிக்க | தேசிய கொடி ஏற்றிய ஆளுநர்... விருது வழங்கிய முதலமைச்சர்: களைகட்டிய கலைநிகழ்ச்சிகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ