நாட்டின் 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை காமராசர் சாலையில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார். தேசிய கொடியை ஏற்றி வைத்த பிறகு முப்படைகளின் அணி வகுப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீர தீர செயலுக்கான பதங்கங்களை வழங்கி விருது பெற்றவர்களை கவுரவித்தார். போலி செய்திகளை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்தி வரும் முகமது ஜூபைர், அரசு பள்ளிக்கு நிலம் வழங்கிய ஆயி அம்மாள், தூத்துக்குடி வெள்ள நிவாரண பணிகளில் உயிரை பணையம் வைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்ட யாசர் அராபத், டேனியல் செல்வ சிங் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பாரம்பரிய பறையாட்டம், மணிப்பூர் மக்களின் பாரம்பரிய நடனங்கள் எல்லாம் இடம்பெற்றன. பள்ளி குழந்தைகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கண்டுகளித்தனர். தமிழ்நாடு கலாச்சாரத்தை கண்முன் நிறுத்தும் வகையில் இடம்பெற்ற நடனத்துக்கு ஆளுநரும், முதலமைச்சரும் கைதட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கலை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு வாகனங்களின் அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் வாகனமாக திருவள்ளுவர் வாகனம் வந்தது. அதில் அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் இயல்பு என்ற குறள் இடம்பெற்றிருந்தது. இந்த வாகனத்துக்குப் பிறகு தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் விதமாக ஜல்லிக்கட்டு, காளையர்கள் இடம்பெற்ற வாகனம் வந்தது. அந்த வாகனத்தில் இப்போது மதுரையில் திறக்கப்பட்டிருக்கும் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு ஜல்லிக்கட்டு மைதானம் இடம்பெற்றிருந்தது. இதேபோல், ஒவ்வொரு அமைச்சரவை தொடர்பான வாகனங்களும் அத்துறைகளின் சிறப்பை வெளிக்காட்டும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டு, அணி வகுப்பை மேற்கொண்டது.
பள்ளிக் கல்வித்துறை வாகனத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சரை சந்திக்கும் புகைப்படம் இருந்தது. இதனைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருகில் இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் மகிழ்ச்சியோடு கலந்துரையாடினார். சென்னை காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட்டனர்.
மேலும் படிக்க | இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் காலமானார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ