சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 10 வரை மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கடந்த இரண்டு நாட்களாக இருந்த அளவுக்கு இது கனமான மழையாக இருக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிழக்கத்திய அலைகளால் மாநிலத்தின் மீது ஈரமான வானிலை பரவி அதனால் மழைக்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதை குறிப்பிட்ட அதிகாரிகள், மழை தொடர்வதற்கும் இதுவே காரணமாக இருக்கும் என்று கூறினர். செவ்வாயன்று மிக அதிக மழை பெய்தது. சில இடங்களில், குறிப்பாக சென்னையின் (Chennai) புறநகர்ப் பகுதிகளில் மழையின் அளவு மிக அதிகமாக இருந்தது.


கடந்த 24 மணி நேரத்தில், கேளம்பாக்கத்தில் அதிகபட்சம் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது, அதன்பின்னர் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தாம்பரத்தில் (Tambaram) 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


எம்.ஜி.ஆர்நகரில் (15 செ.மீ), ஷோலிங்கநல்லூர் மற்றும் டிஜிபி அலுவலகம் (14 செ.மீ), மற்றும் பூவிருந்தவல்லி, கொரட்டூர் மற்றும் மீனம்பாக்கம் (13 செ.மீ) என சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை நிலையத்தில் 9 செ.மீ மழை பெய்தது.


1915 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் செங்கல்பட்டில் 21 செ.மீ மழை பெய்தது. அந்த அளவு இன்னும் முறியடிக்கப்படவில்லை என்று வானிலை ஆய்வு மைய (IMD) அதிகாரிகள் குறிப்பிட்டனர். 


தமிழகத்தில் (Tamil Nadu) ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, மேலும் சனிக்கிழமை முதல் இது வேகம் பெற்றும் மாநிலிதத்தில் பல இடங்களில் பரவலான மழை பெய்யும். 


ALSO READ: இன்றைய வானிலை முனறிவிப்பு: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!


சென்னையில் கடந்த மூன்று நாட்களாக விடாமல் மழை பெய்து சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலத்தைப் போன்று மூன்று நாட்களாக மழை பெய்து கொண்டே இருக்கின்றது. அதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது.


அடுத்த சில நாட்களுக்கு சென்னையில் பலத்த மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் இரண்டு நாட்கள் தொடர்ந்து மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி மாதத்தில் நகரத்தின் மாதாந்திர மழையின் அளவு ஏற்கனவே 15.3 செ.மீ.-ஐ எட்டியுள்ளது, இது சமீபத்திய தசாப்தங்களில் மிக உயர்ந்த அளவாகும்.


புதன்கிழமை முதல் நீர் வரத்து குறைந்துவிட்டதால் சோழவரம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்படுவதை நீர்வளத் துறை நிறுத்தியது.
ரெட் ஹில்ஸ் நீர்த்தேக்கத்திலிருந்து ஓரளவு நீர் வெளியேற்றப்படுகிறது. மழை குறையும் வரை 30-40 கியூசெக்ஸை அளவு நீர் வெளியேற்றப்படும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.


ALSO READ: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி: ராதாகிருஷ்ணன்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR