காவல்துறையின் அவலம்: புகார் கொடுக்க சென்ற பெண்ணை அடித்து துன்புறுத்திய பெண் காவலர்கள்
Tamil Nadu Crime News: முன்னாள் காதலன் மீது புகார் கொடுக்க சென்ற இளம் பெண்ணின் புகாரை வாங்காமல், அந்தப் பெண்ணை அடித்தும் செல்போனை பிடுங்கியும் அலைக்கழித்த பெண் காவலர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime News In Tamil Nadu: சென்னை முகப்பேரு பகுதியை சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவர் பெற்றோர்களை இழந்த நிலையில் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த இளம் பெண்ணுக்கு கோவில்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணன் முகப்பேர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் கிருஷ்ணனும் இளம்பெண்ணும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
அப்போது தான் சிறிது சிறிதாக கிருஷ்ணன் தனது சுய ரூபத்தை காட்டத் தொடங்கி இருக்கிறார். அந்தப் பெண்ணிடம் அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்கள் வேண்டும் என்று சொல்லி செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் போட்டோக்களை அனுப்பிய இளம் பெண், பின்னர் ஒரு கட்டத்தில் இது எல்லை மீறி போகிறது என்பதை உணர்ந்து பிரிந்து சென்று விட்டார்.
அதிலிருந்து கிருஷ்ணன் அந்த பெண்ணுக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுப்பது, தகாத வார்த்தைகளால் திட்டுவது, அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டுவதுமாக இருந்துள்ளார்.
இதனால் விரத்தியடைந்த அந்த பெண் தான் தற்போது தங்கி வேலை பார்க்கும் தாம்பரம் சானடோரியம் பகுதிக்கு உட்பட்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் காவலர்கள் சம்பவம் நடந்தது முகப்பேர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று கூறி புகாரை வாங்க மறுத்துள்ளனர்.
பின்னர் அந்தப் பெண் 1091 என்ற மகளிர் உதவி எண்ணுக்கு கால் செய்துள்ளார். அப்போது அங்கு அந்தப் பெண்ணிடம் பேசிய காவல் அதிகாரி ஒருவர் மறுபடியும் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மறுபடியும் அந்த பெண் அதே தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகாரை பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அங்கு இருந்த பெண் காவலர் ஒருவர் அந்தப் பெண்ணை கொச்சை வார்த்தைகளால் திட்டி, அடித்து துன்புறுத்தியதோடு செல்போனையும் பிடுங்கிக் கொண்டு அந்தப் பெண்ணை அங்கிருந்து விரட்டி உள்ளனர்.
மேலும் படிக்க: அதிர்ச்சி! பிறந்த 29 நாட்களே குழந்தை... மண்ணோடு மண்ணாக புதைத்த தாய் - நடந்தது என்ன?
பின்னர் அந்தப் பெண் காவல் உதவி ஆணையர் ஸ்ரீனிவாசனை சந்தித்து காவல் நிலையத்தில் தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி அழுதபடி கூறியுள்ளார். இதை அடுத்து அவர் அந்தப் பெண்ணின் செல்போனை உடனடியாக அவரிடம் கொடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை பெற்றுக் கொள்ளும்படி சக காவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். காலை 11 மணிக்கு காவல் நிலையம் வந்த பெண்ணிடம் அந்த புகாரை பெறுவதற்குள் இரவு 10 மணி ஆகிவிட்டது.
பெண்கள் வாழ சிறந்த நகரம் சென்னை என்று நாம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில் இதே சென்னையில் தான் ஒரு பெண்ணுக்கு இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்துள்ளது. புகார் கொடுக்க வந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து துன்புறுத்தி செல்போனை பறித்த காவலர்களின் இந்த செயல் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: ஏஎஸ்பி பல்வீர்சிங்கால் பல் உடைப்பு: பாதிக்கப்பட்டவர்கள் அளித்த சாட்சியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ